ராகுலை அவமதித்தாரா ஒபாமா.. காங்கிரசுக்கு வராத கோபம் சிவசேனா பொங்குவது ஏன்.!
ராகுலை அவமதித்தாரா ஒபாமா.. காங்கிரசுக்கு வராத கோபம் சிவசேனா பொங்குவது ஏன்.!

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, தமது நினைவுகளை புத்தகமாக எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் உலகத் தலைவர்கள், அமெரிக்க அதிபர் பதவியில் இருந்தபோது நடந்த சம்பவங்கள், தனது திருமண வாழ்க்கை என பல்வேறு விவகாரங்கள் அடங்கியுள்ளது.
தற்போது இந்த புத்தகம் வெளியுலகத்துக்கு வந்துள்ளது. அதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில் பதற்றத்தோடு இருப்பவர், நன்றாகப் படித்து ஆசிரியரைக் கவர வேண்டும் என நினைக்கும் மாணவர் போன்று இருந்தாலும், குறிப்பிட்ட ஒரு விவகாரத்தில் ஆழ்ந்த அறிவைப் பெறக்கூடிய விருப்பமோ, தகுதியோ பெறாமல் இருக்கிறார் என்று ஒபாமா விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், ஒபாமாவின் இந்த கருத்துக்கு மற்ற கட்சியை விட சிவசேனா முதல் ஆளாக கண்டனம் தெரிவித்துள்ளது. இது பற்றி சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘‘வெளிநாட்டு அரசியல் கட்சித் தலைவர்’’ இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் பற்றி இது போன்ற கருத்துக்களை கூற முடியாது. அவரின் கருத்துகள் வெறுக்கத்தக்கவை. நாங்கள் ஒரு போதும் ட்ரம்ப் பைத்தியக்காரர் என்று சொல்லமாட்டோம். இந்த தேசத்தைப் பற்றி ஒபாமாவுக்கு எவ்வளவு தெரியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் சிவசேனா இணைந்து ஆட்சி நடத்தி வருகிறது. முதலமைச்சராக உத்தவ்தாக்கரே உள்ளார். காங்கிரஸ் கூட்டயில உள்ள மற்ற அரசியல் கட்சிகள் கண்டனங்களை தெரிவிக்காதபோது சிவசேனா மட்டும் கண்டனங்களை பதிவிடு ஏன் என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒபாமா கூறியது உண்மைதான் என்று மற்ற கட்சியினர் அமைதி காத்து வருவதாகவும் கூறப்படுகிறது. சிவசேனாவிற்கு பதவி ஆசையால் ராகுல் கருத்துக்கு பதில் அளித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.