Kathir News
Begin typing your search above and press return to search.

"எண்ணித் துணிக கருமம்" என அறிவுரை வழங்கிய ஸ்டாலின்! மீத்தேன் கையெழுத்து எண்ணாமல் போட்டாரா?

"எண்ணித் துணிக கருமம்" என அறிவுரை வழங்கிய ஸ்டாலின்! மீத்தேன் கையெழுத்து எண்ணாமல் போட்டாரா?

எண்ணித் துணிக கருமம் என அறிவுரை வழங்கிய ஸ்டாலின்! மீத்தேன் கையெழுத்து எண்ணாமல் போட்டாரா?

Mohan RajBy : Mohan Raj

  |  24 Dec 2020 4:38 PM GMT

அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவது சுலபமான செயல் ஆனால் அதனை கடைபிடிப்பது சிரமமான காரியம் இது தனி மனிதனுக்கு மட்டுமல்ல அரசியலில் ஈடுபட்டு பொதுவாழ்க்கை வாழ்பவர்களுக்கும் இது பொருந்தும்.

அந்த வகையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்கள் இன்று தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்களுக்கு "எண்ணித் துணிக கருமம்" என அறிவுரை கூறியுள்ளார்.
காரணம், சென்னை மாநகராட்சியில் சொத்து வரியுடன் சேர்த்து குப்பையைச் சேகரிப்பதற்கு ஜனவரி 1-ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது.

இதன்படி வீடுகளுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரையும், திருமண மண்டபங்களுக்கு ரூ.1000 முதல் ரூ.10,000 வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கும் தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

இதற்கு அனைத்து தரப்பில் இருந்து பல்வேறு கருத்துக்கள் எழுந்த நிலையில் கட்டணம் வசூலிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

இதற்காகதான் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் "மின் வாரியப் பணிகளைத் தனியாருக்கு ஒப்படைப்பதை எதிர்த்துப் போராடுவோம் என்றேன். வாபஸ் பெற்றார் அமைச்சர் தங்கமணி!

'குப்பை கொட்டவும் வரி' என்ற அறிவிப்பை ரத்து செய்யாவிட்டால், தி.மு.க ஆட்சி வந்து செய்யும் என்றேன். வாபஸ் பெற்றார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி! அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீர்களா? 'எண்ணித்துணிக கருமம்' என அ.தி.மு.க அமைச்சர்களைக் கேட்டுக் கொள்கிறேன்" என அறிவுரை மழை பொழிந்துள்ளார்.

ஆனால் தி.மு.க ஆட்சிக்காலத்தில் மீத்தேன் கையெழுத்தை போடுவதற்கு முன் ஸ்டாலின் எண்ணி பார்க்க வில்லையா? அல்லது எண்ணி பார்த்து விட்டு மக்கள் எப்படியாவது போகட்டும் என நினைத்தாரா? அல்லது அறிவுரை எல்லாம் அடுத்தவருக்கு தானா தனக்கு இல்லையா என தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்கள் விளக்கி கூற வேண்டும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News