Kathir News
Begin typing your search above and press return to search.

'கிறிஸ்துவம் தான் முதல்ல தெரியுமா?' - மீண்டும் வெடியை கொளுத்தி போடும் ஆ.ராசா - மீண்டும் தூக்கம் தொலைக்க போகும் முதல்வர் ஸ்டாலின்

'கிறிஸ்தவ தான் முதலாவது மதம்' என ஆ.ராசா மீண்டும் ஒரு வெடியை கொளுத்தி பேசியுள்ளார்.

கிறிஸ்துவம் தான் முதல்ல தெரியுமா? - மீண்டும் வெடியை கொளுத்தி போடும் ஆ.ராசா - மீண்டும் தூக்கம் தொலைக்க போகும் முதல்வர் ஸ்டாலின்

Mohan RajBy : Mohan Raj

  |  30 Jan 2023 2:52 AM GMT

'கிறிஸ்தவ தான் முதலாவது மதம்' என ஆ.ராசா மீண்டும் ஒரு வெடியை கொளுத்தி பேசியுள்ளார்.

திமுகவிற்கு இது நல்ல காலமா? கெட்ட காலமா? என தெரியவில்லை, பேசிப் பேசியே வளர்ந்த கட்சி தற்போது அதே பேச்சாளர்களால் மக்கள் மத்தியில் வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக சமீபகாலமாக மேடைகளில் அதன் தலைவர்கள் பேசுவதும், செயல்களும் மக்கள் மத்தியில் முகம் சுளிக்க வைத்துள்ளது. குறிப்பாக திமுகவின் எம்பி ஆர் ராசா பேசுவது என்றாலே முதல்வருக்கே தூக்கம் தொலைந்து விடும்! காரணம் தான் படித்த கருத்துக்களை கூறுகிறேன் என்ற பெயரில் தன்னுடைய கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை, தன்னுடைய இடதுசாரி சித்தாந்தத்தை திமுகவின் கருத்தாக மேடைகளில் வைத்து விடுவார்.

அது பெருவாரியான இந்துக்கள் சமுதாயத்தை கண்டிப்பாக பாதிக்கும். அவ்வாறு பாதிக்கும் வகையில் இந்துக்கள் கொதித்தெழுந்து திமுகவிற்கு எதிராக கேள்வி எழுப்பும் பொழுது முதல்வர் ஸ்டாலின் தூக்கம் என்று தவிப்பதும் ஆண்டிமுத்து ராசா அதனை பார்த்து சிரிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.

ஏற்கனவே ஆண்டிமுத்து ராசா இந்துக்கள் விபச்சாரிகளின் மகன்கள் என கூறினார், தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் பற்றிய அவதூறாக பேசினார் ஆண்டிமுத்து ராசா இப்படி எல்லாம் அவதூறு பேச்சிற்கு சொந்தக்காரரான ஆண்டிமுத்து ராசா தற்போது மேலும் ஒரு கருத்தாக 'கிறிஸ்துவ தான் முதலாவது மதம்' என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குன்னூரில் உள்ள தனியார் பள்ளியின் 157 வது ஆண்டு விழாவில் பங்கேற்ற மாணவ மாணவிகள் மத்தியில் ஆண்டு முதல் ராசா பேசினார். அப்போது அவர் பேசியதாவது இந்தியாவில் கல்வி பற்றி பேச ஆரம்பித்தால் இன்றைய அரசியல் சூழலில் விவாத பொருளாக மாறிவிடும். மூவாயிரம் ஆண்டுகளாக மறுக்கப்பட்ட கல்வி பொதுமக்கள் கையில் சேர்த்த பெருமை ஆங்கிலே ஆட்சியை சேரும் இந்தியாவில் மட்டும் தான் சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் கல்வி மறுக்கப்பட்ட ஒரு மோசமான வரலாறு கொண்ட மக்களாக நாம் இருந்திருக்கிறோம். சிலருக்கு மட்டுமே கல்வி சாத்தியப்பட்ட நிலையில் இருந்து மாறி சாதாரண மக்களுக்கும் கல்வி சேர வேண்டும் என எண்ணிய மதங்களில் கிறிஸ்துவ மதம் முதலாவது என்பதை நான் மனமாற ஒப்புக்கொள்கிறேன்' என்றார்.

மேலும் அவர் பேசியதாவது, 'இன்றைக்கு மதம் அரசியலில் புகுந்து இருக்கிறது, இங்கு பேசிய மாணவர்கள் பகவத்கீதை பைபிள் குர்ஆன் வசனங்கள் சொன்னார்கள் எல்லா மதங்களும் ஏற்படுவது தான் என்பதை வாசித்தன. எனக்கு கடவுள் மேல் நம்பிக்கை இல்லை அன்பு, இரக்கம் தான் கடவுள்' அப்டின்னு பேசினாருங்க.

உலகிலேயே தொன்மையான மதம் இந்து மதம், இந்த மாதத்தில் கல்வியை கடவுளாக எண்ணி வணங்கினார்கள்! குருகுலங்கள் அமைத்து கல்வியை கற்றுக் கொடுத்ததும், மற்ற மதங்களுக்கெல்லாம் முன்னோடி மதமாகவும் இருந்தது இந்து மதம்! இது அனைத்து இதிகாசங்களிலும் புராணங்களிலும் இருக்கின்றன ஆனால் கிறிஸ்துவ மதம் தான் முதல் மாதம் கிறிஸ்துவம் வந்த பிறகுதான் கல்வி வந்தது என ஆ.ராசா பேசியுள்ளது மீண்டும் ஒரு சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே திமுக அமைச்சர்கள் மற்றும் தலைவர்களின் நடவடிக்கையால் துக்கம் இல்லை என முதல்வர் ஸ்டாலின் புலம்பி வரும் நிலையில் தற்போது இந்த பேச்சால் என்ன ஆகப் போகிறார் என்று தெரியவில்லை!



Next Story
கதிர் தொகுப்பு
Trending News