கருணாநிதியின் வாழ்க்கை பள்ளிப்பாடங்களில் இடம்பெறும்: பெண்களை இழிவாக பேசிய லியோனி தகவல்.!
எதிர்க்கட்சிகள் பேசிய பின்னரும் இன்று திண்டுக்கல் லியோனி தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக திண்டுக்கல் லியோனி பொறுப்பெற்றுள்ளார்.
By : Thangavelu
பெண்களின் இடுப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திண்டுக்கல் லியோனியை முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக நியமினம் செய்து உத்தரவிட்டார். லியோனி உத்தரவுக்கு பாஜக மற்றும் அதிமுக கடும் எதிர்ப்புகள் தெரிவித்தது. பெண்களை இழிவாக பேசியவருக்கு இப்படிப்பட்ட ஒரு புனிதமான பதவியில் அமர வைப்பதா என ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகள் பேசிய பின்னரும் இன்று திண்டுக்கல் லியோனி தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக திண்டுக்கல் லியோனி பொறுப்பெற்றுள்ளார்.
இதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், கருணாநிதியின் கலைப்பணி, எழுத்துப்பணி, பொதுமக்களுக்கு ஆற்றிய பணி ஆகியவைகளை தொகுத்து ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை பாடநூல் வழியே மாணவர்கள் தெரிந்து கொள்ள முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.
இது போன்றவரை பாடநூல் கழக தலைவராக நியமனம் செய்வது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் செயலாக அமையும் என பலர் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.