மம்தா கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார் தினேஷ் திரிவேதி.!
முன்னாள் ரயில்வே அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான தினேஷ் திரிவேதி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் கட்சியில் இணைத்துக் கொண்டார்.
By : Thangavelu
முன்னாள் ரயில்வே அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான தினேஷ் திரிவேதி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் கட்சியில் இணைத்துக் கொண்டார்.
மேற்கு வங்களாத்தில் பாஜகவுக்கும், மம்தா பானர்ஜி கட்சிக்கும் சரியான அரசியல் போட்டி நடைபெற்று வருகிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அம்மாநிலத்தில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை முடக்கி வைத்துள்ளார்.
ஏழைகளுக்கு கிடைக்க வேண்டிய பணத்தையும் நிறுத்தி வைத்துள்ளார். இதனால் அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் மம்தா கட்சியில் இருந்து பல எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர்.
அந்த வகையில் ரயில்வே முன்னாள் அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பியுமான திரிவேதி தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அப்போது ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
கட்சியில் சேர்ந்த பின்னர் பேசிய திரிவேதி தற்போதுதான் ஒரு தேசிய கட்சியில் இணைந்துள்ளேன். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. குடும்ப ஆதிக்கம் இல்லாத கட்சியாக பாஜக உள்ளது என கூறினார்.