தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் எப்போது.? விஜயகாந்த் தகவல்.!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் முடிந்தவுடன் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் தலைமை கழகத்தில் நடத்துவதாக இருந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கு உடனடியாக அமலுக்கு வந்ததாலும், கொரோனா பரவல் காரணமாகவும், ஒரே இடத்தில் அனைவரும் கூட்டம் சேரக்கூடாது என்பதற்காகவும் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடியவில்லை.

வெகுவிரைவில் ஊரடங்கு காலம் முடிந்தவுடன் அனைத்து மாவட்ட செயலாளர்களை தலைமை கழகத்திற்கு நேரில் அழைத்து ஆலோசனை நடத்த இருக்கிறோம். இதில் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம்தான்.
தேர்தலுக்கு முன்பு யாருடன் கூட்டணி வைப்பது குறித்து மாவட்ட செயலாளர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகே முடிவு எடுக்கிறோம். அதே போல் தேர்தல் முடிந்த இந்த நேரத்திலும் மாவட்ட செயலாளர்களை நேரில் அழைத்து, இனி வரும் காலங்களில் தேசிய முற்போக்கு திராவிட கலந்தாலோசித்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
மேலும், வரும் காலத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்ல நாம் அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும். இதுபோன்ற நேரத்தில் கழக நிர்வாகிகள் யாரும் குழப்ப அடைய வேண்டாம். மேலும் சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்புவது, தலைமை கழகம் மீது களங்கம் விளைவித்தல் போன்ற செயல்களில் ஈடுபடாமல் அனைவரும் ஒன்றிணைந்து கழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும்.
ஊரடங்கு முடிந்தவுடனோ அல்லது தமிழக அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றாவதோ மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தை வெகுவிரைவில் நடத்துவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். எனவே இந்த நேரத்தில் கழக நிர்வாகிகள் அனைவரும் உறுதியாக இருந்து கட்சியின் வளர்ச்சியை நோக்கி பயணிப்போம்.. இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.