நான் யாரு தெரியுமா? என பெண் போலீசை அடிக்கப்பாய்ந்த தி.மு.க வழக்கறிஞர் !
By : Mohan Raj
சென்னையில் போக்குவரத்து பணியில் இருந்த பெண் காவலரை தி.மு.க'வை சேர்ந்த வழக்கறிஞர் உள்ளிட்ட இருவர் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் சமீபத்தில் பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி சாலை போக்குவரத்து முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது. பல இடங்களில் தண்ணீர் வடியாததால் காவலர்கள் நின்று போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை புளியந்தேப்பு காவல் நிலையம் அருகே மழை நீர் தேங்கியதாலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும் அங்கு மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெண் காவலர் உமா மகேஷ்வரி அங்கு வந்தவர்களை மாற்று பாதையில் செல்ல கூறியதால் அங்கு வந்த இருவர் அந்த பெண் காவலரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அந்த இருவருமெ அந்த பெண் காவலரை அடிக்க பாய்ந்தனர்.
இதனைதொடர்ந்து போலீசார் விசாரித்ததில் பிரச்சினை செய்த இருவரில் ஒருவர் தி.மு.க'வை சேர்ந்த வழக்கறிஞர் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.