Kathir News
Begin typing your search above and press return to search.

உங்களுக்கெல்லாம் இவ்வளவு தான் தர முடியும்! சிறுபான்மையின கட்சிகளை மூலையில் உட்கார வைத்த தி.மு.க!

உங்களுக்கெல்லாம் இவ்வளவு தான் தர முடியும்! சிறுபான்மையின கட்சிகளை மூலையில் உட்கார வைத்த தி.மு.க!

MuruganandhamBy : Muruganandham

  |  2 March 2021 1:45 AM GMT

தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் திமுக ஒதுக்கப்பட்டு கையெழுத்தானது.

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில், ஆர்.எஸ்.பாரதி, ஐ.பெரியசாமி, பொன்முடி உள்ளிட்ட குழுவினர் அண்ணா அறிவாலயத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீனுடனும், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவுடனும் இன்று தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் திமுக ஒதுக்கப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்ட நிலையில், 3 தொகுதிகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி திமுக கூட்டணியில்தான் தேர்தலை சந்தித்தது.

அப்போது திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 5 தொகுதிகளை கேட்டு வாங்கி போட்டியிட்டது. ஆனால், கடையநல்லூர் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது.

அந்த தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி போராடி 5 தொகுதிகளைக் கேட்டு வாங்கியது. ஆனால், மனிதநேய மக்கள் கட்சிக்கு தேவையில்லாத ஒரு தொகுதியை திமுக அளிக்க முன்வந்ததால் அந்த தொகுதி வேண்டாம் என்று கூறிவிட்டு 4 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. ஆனால், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்படும். எந்த சின்னத்தில் போட்டி என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News