"மரண பயம் போய்டுச்சு பரமா" - ரஜினி அறிவிப்பை வெடி வெடித்து குதூகலிக்கும் தி.மு.கவினர்!
"மரண பயம் போய்டுச்சு பரமா" - ரஜினி அறிவிப்பை வெடி வெடித்து குதூகலிக்கும் தி.மு.கவினர்!
By : Mohan Raj
திரு.ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வரவில்லை என்ற அறிவிப்பை தொடர்ந்து தி.மு.க'வினர் வெடி வெடித்து கொண்டாடி வருகின்றனர். கடந்த சில தினங்கள் முன் திரு.ரஜினிகாந்த் அவர்கள் வரும் டிசம்பர் 31'ம் தேதி அன்று கட்சி பற்றிய அறிவிப்பையும், வரும் ஜனவரி'யில் கட்சி துவக்கத்தையும் முன்னெடுக்க இருப்பதாக அறிவித்த நாள் முதல் தி.மு.க'வினர் தூக்கம் தொலைத்து, நடுநிலை அரசியல் பேசுபவர்களை கண்டால் எறிந்து விழுந்து, முக்கியமாக ரஜினி ரசிகர்களை கண்டால் பரம்பரை விரோதியை கண்டதுபோலும், தொலைக்காட்சி'யில் ரஜினியின் படங்களை கண்டால் கடுப்பில் சேனலை மாற்றி இப்படி முற்றிலும் மனநிலை மாறியவர்களாக சுற்றி வந்தனர்.
ஆனால் தற்பொழுது எதிர்பாராத விதமாக 'அண்ணாத்த' படப்பிடிப்பின் இடையில் ஏற்பட்ட உடல்நல தொய்வு காரணமாக திரு.ரஜினிகாந்த் அவர்களின் உடலுக்கு ஓய்வு மற்றும் தொற்று ஏற்படா சூழ்நிலை மருத்துவர்களின் பரிந்துரையை முன்னிட்டு இன்று "நான் அரசியலுக்கு வர போவதில்லை" என உருக்கமாக தனது ரசிகர்களுக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதன் மூலம் திரு.ரஜினி அவர்கள் அறிவித்தது போல் அரசியல் பிரவேசம் இருக்காது அதற்கு உடல்நிலை காரணமே என அவரின் ரசிகர்களும் "தலைவா! உங்கள் உடல் நலனே முக்கியம்" என குரல் எழுப்ப துவங்கிவிட்டனர்.
ஆனால் ஏற்கனவே கூறியது போல் திரு.ரஜினிகாந்த் அவர்களின் இன்றைய அறிவிப்பை தி.மு.க'வினர் பட்டாசு வெடித்து கொண்டாடி இருக்கின்றனர். இன்னும் சில ஊடக தி.மு.க'வினரோ "அப்பாடா பிழைப்பில் மண் விழவில்லை" என்கிற ரேஞ்சில் மகிழ துவங்கிவிட்டனர். இத்தனை நாள் ரஜினி வந்தாலும் சூரியன் உதிக்கும் என குரல் எழுப்பி வந்த உடன்பிறப்புகள் தற்பொழுது குதூகலத்துடன் இருப்பது அவர்களின் இத்தனை நாள் மரண பயத்தை காட்டிவிட்டது.