Kathir News
Begin typing your search above and press return to search.

டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதிக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் வழங்காதது ஏன்?

டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதிக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் வழங்காதது ஏன்?
X

ThangaveluBy : Thangavelu

  |  15 May 2022 12:03 PM GMT

இந்தியா முழுவதும் காலியாக உள்ள 57 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூன் 10ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி தமிழகத்தை சேர்ந்த தி.மு.க. எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் உள்ளிட்ட 6 பேரின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. இதற்கு மத்தியில் தமிழகத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

இந்நிலையில், தி.மு.க. சார்பில் 4 இடங்களில் ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கியுள்ளது. மீதம் உள்ள 3 இடங்களுக்கு தி.மு.க. சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் மற்றும் கிரிராஜன் உள்ளிட்டோர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி.யாக உள்ள ராஜேஸ்குமாருக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த வைத்தியலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்ததால் அவரது இடத்திற்கு ராஜேஸ்குமார் நியமனம் செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் ஒரு ஆண்டு மட்டுமே இருந்த நிலையில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இவர் இருவரும் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்ததால் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆர்.எஸ்.பாரதி பத்திரிகையாளர்களை ரெட் லைட் மீடியா என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பத்திரிகையாளர்கள் மத்தியில் கண்டனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே ராஜ்யசபா சீட் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

Source: Asianetnews

Image Courtesy: The Hans India

Next Story
கதிர் தொகுப்பு
Trending News