சத்தியமங்கலம்: ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு, மாட்டாமல் இருக்க சி.சி.டி.வி.யின் ஹார்ட்டிஸ்கை திருடி சென்ற தி.மு.க. ஒன்றிய சேர்மேன்.!
அப்போது கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் திமுகவினர் ஓட்டல் ஊழியர்களிடம் தங்களுக்கு மட்டுமே சப்ளை செய்ய வேண்டும் என்று அட்டூழியங்கள் செய்துள்ளனர்.

சத்தியமங்கலம் அருகே ஓட்டல் ஒன்றில் நல்லா சாப்பிட்டு விட்டு, பணம் கொடுப்பதற்கு பதிலாக ஊழியரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பழைய பேருந்து நிலையம் அருகே நகராட்சி வணிக வளாகத்தில் ஒரு ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த ஓட்டலுக்கு சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் இளங்கோ மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்று சாப்பிட்டுள்ளனர்
அப்போது கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் திமுகவினர் ஓட்டல் ஊழியர்களிடம் தங்களுக்கு மட்டுமே சப்ளை செய்ய வேண்டும் என்று அட்டூழியங்கள் செய்துள்ளனர். இதனிடையே சாப்பிட்டு முடித்த பின்னர் இளங்கோ மற்றும் திமுக தொண்டர்கள் ஓட்டல் ஊழியர்களை அடித்துள்ளனர்.
அதனை மறைப்பதற்காக அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவாகும் ஹார்ட்டிஸ்கையும் திருடி சென்றுள்ளனர்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே திமுகவினர் இப்படி அட்டூழியங்கள் செய்தால் சாதாரண மக்களின் நிலை கேள்வி குறியாக உள்ளது.