Kathir News
Begin typing your search above and press return to search.

திருச்செந்தூர் கோயிலில் நள்ளிரவில் பக்தர்களை விரட்டியடித்து, தி.மு.க. குடும்பத்தினர் மட்டும் தரிசனம் செய்வது நியாயமா? அண்ணாமலை அதிரடி கேள்வி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த (நவம்பர் 6ம் தேதி) இரவு நேரங்களில் தங்கியவர்களை கொட்டும் மழை என்றும் பாராமல் போலீசார் விரட்டியடித்த வீடியோ காட்சிகள் வெளியானது. இதற்கு இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.

திருச்செந்தூர் கோயிலில் நள்ளிரவில் பக்தர்களை விரட்டியடித்து, தி.மு.க. குடும்பத்தினர் மட்டும் தரிசனம் செய்வது நியாயமா? அண்ணாமலை அதிரடி கேள்வி!
X

ThangaveluBy : Thangavelu

  |  10 Nov 2021 5:41 AM GMT

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த (நவம்பர் 6ம் தேதி) இரவு நேரங்களில் தங்கியவர்களை கொட்டும் மழை என்றும் பாராமல் போலீசார் விரட்டியடித்த வீடியோ காட்சிகள் வெளியானது. இதற்கு இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.


கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் அதிகளவு வரத்தொடங்கினர். இதனிடையே கந்தசஷ்டி திருவிழா கடந்த 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தீபாவளி விடுமுறை காரணமாக ஏராளமான பக்த்ரகள் கோயிலுக்கு வருகை புரிந்தனர். கடலில் நீராடி சாமி தரிசனம் செய்து வந்தனர். இதன் பின்னர் கடந்த 6ம் தேதி நள்ளிரவு கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் இரவு நேரம் என்பதால் கோயில் வளாகத்தில் தங்கியிருந்தனர். அப்போது கொரோனா தொற்று காரணம் காட்டி அதிகளவு கோயிலில் இருக்கக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதனை கோயில் நிர்வாகம் நடைமுறைப்படுத்த கோயிலில் தங்கியிருந்த பக்தர்களை போலீசார் துணையுடன் விரட்டி அடித்தது. தற்போது விரட்டி அடித்த அதே நாளில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.


இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள செய்தியை பதிவிட்டுள்ளார். அதில் தமிழில் கீழே குறிப்பிட்டுள்ளதாவது: திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு மக்களுக்கு அனுமதி இல்லை என்று சொன்ன பின்பு, அங்கிருந்த மக்களை போலீஸ் மூலமாக விரட்டிய பின்பு அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், ஆளும் கட்சியான அறிவாலயத்தை சேர்ந்த இந்து இறநிலையத்துறை அமைச்சர், அவர்களுடைய குடும்பத்தினர் என்பதுதான் செய்தி! என்று குறிப்பிட்டுள்ளார்.

அதாவது ஆங்கில நாளேட்டில் கூறிய செய்தியில், திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது உதவியாளர் கிருபாகரணம் மற்றும் திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ., மற்றும் உறவினர்கள் இந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். சாதாரண பொதுமக்களுக்கு அனுமதி வழங்காமல் விஐபி என்ற பெயரில் அவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கோயிலில் வந்து சென்றது அம்பலமாகியுள்ளது. இது போன்ற நடவடிக்கைகளை பார்க்கும்போது பொதுமக்களிடம் திமுக மீது மிகப்பெரிய வெறுப்பு ஏற்பட்டு வருகிறது. இனிமேல் ஆவது அனைத்து பக்தர்களையும் சரிசமமாக நடத்த வேண்டும் என்பது அனைவரின் விருப்பமும் ஆகும்.

Source: Twiter

Image Courtesy:Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News