Kathir News
Begin typing your search above and press return to search.

கூட்டணிக்குள் வளைத்துப் போட கமல ஹாசனை துரத்தும் தி.மு.க. :  என்ன சொல்கிறது கமல் தரப்பு.?

கூட்டணிக்குள் வளைத்துப் போட கமல ஹாசனை துரத்தும் தி.மு.க. :  என்ன சொல்கிறது கமல் தரப்பு.?

கூட்டணிக்குள் வளைத்துப் போட கமல ஹாசனை துரத்தும் தி.மு.க. :  என்ன சொல்கிறது கமல் தரப்பு.?
X

Rama SubbaiahBy : Rama Subbaiah

  |  20 Dec 2020 10:26 AM GMT

கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே தி.மு.க. வுடன் கூட்டணி அமைக்க கமலஹாசன் முன் வந்ததாகவும், ஒரே ஒரு சீட் மட்டுமே தரப்படும் என தி.மு.க. கூறியதாகவும், அதனால் அந்த கூட்டணி அமையவில்லை எனவும் செய்திகள் வந்தன. ஏனெனில் கடந்த நாடாளுமன்ற தேர்தல் வரை கமல் கட்சியை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் தேர்தல் முடிவுகளின்படி எல்லா தொகுதிகளிலும் தனியாக போட்டியிட்ட அவருடைய கட்சி எந்தவொரு தொகுதியிலும் வெற்றி பெறமுடியவில்லை என்றாலும் குறிப்பாக கோவை உள்ளிட்ட தமிழக நகர்ப்புறங்களில் அவருக்கு கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளன. மொத்தம் 16 இலட்சம் வாக்குகளை அதாவது 3.63 வாக்குகளை அவர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதில் இருந்து கமல் கட்சியான மக்கள் நீதி மய்யம் கட்சியும் இப்போது பலரால் பேசப்படும் கட்சியாக மாறிவிட்டது. இந்நிலையில் வரும் 2021 சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு இப்போதே பிரச்சாரம் தொடங்கிவிட்டார் கமலஹாசன். முதலில் எம்.ஜி.ஆரின் கோட்டையான தென் மாவட்டங்களில் திட்டமிட்டு பிரச்சாரத்தை தொடங்கிய அவரின் கூட்டத்துக்கு கணிசமாள அளவில் கூட்டம் சேர்கிறது என கூறபபடுகிறது.

பிரச்சாரத்தின் போது அவர் எம்.ஜி.ஆர் , ரஜினி குறித்து பேசி வருகிறார். இதனால் ரஜினி தொடங்கவுள்ள கட்சியில் இவர் இணைவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும், ரஜினி, கமல் சேர்ந்தால் அது தேர்தலின் போது சவாலான அரசியல் விளைவுகளை உருவாக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இது அ.தி.மு.க. வை விட தி.மு.க. வுக்கு சங்கடத்தை அளிக்கும் என்றும், சென்ற சட்ட மன்ற தேர்தலில் விஜயகாந்த், வைகோ, திருமாவளவன் அமைத்த மூன்றாவது கூட்டணி தி.மு.க. வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்தது, ஆனால் அ.தி.மு.க. வுக்கு உதவியது, அதுபோல ஆகலாம் என தி.மு.க. கருதுவதாக கூறபபடுகிறது. அதனால்தான் ரஜினியுடன் கமல் சேராதவாறு தி.மு.க. சில முயற்சிகளை எடுப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தி.மு.க. ஏற்கனவே கூட்டணியில் பங்கு பெறும் கட்சிகள் குறித்து முடிவு செய்துள்ளதாகவும், சில கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறபப்டும் நிலையில், தி.மு.க. - மக்கள் நீதி மய்யம் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை சென்னையில் ஒரு ரகசிய இடத்தில் நடைபெற்றதாக, தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச்சூழலில், தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை, இருவேறு இடங்களில் வைத்து சந்தித்துப் பேசியதாகவும், தொகுதிப் பங்கீடு பேச்சு நடைபெற்றதாகவும் பிரபல ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தி.மு.க. தரப்பிலும், உதயநிதி ஸ்டாலின் தரப்பிலும் இந்த தகவலில் உண்மை இல்லை என தெரிவித்தாலும், ரஜினி கட்சியின் போக்கு, அதற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து பிறகு முடிவெடுக்கலாம் என கமல் தரப்பில் பிடி கொடுக்காமல் பிகு செய்வதாக கூறபபடுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News