7 பேர் விடுதலையில் தி.மு.க., காங்கிரஸ் முட்டுக்கட்டை.. முதலமைச்சர் விளக்கம்.!
7 பேர் விடுதலையில் தி.மு.க., காங்கிரஸ் முட்டுக்கட்டை.. முதலமைச்சர் விளக்கம்.!
By : Kathir Webdesk
தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் மீதான உரைக்கு நன்றி தெரிவித்து, அந்த உரை மீதான விவாத நிகழ்ச்சி தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பேரவையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: 7 பேர் விடுதலையில் உண்மைக்கு மாறான தகவல்களை திமுக தெரிவித்து வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு 7 பேர் விடுதலை விவகாரம் பற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் கருணை மனுவை கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை நிராகரித்தது. இதனிடையே மூன்று பேரின் தண்டனையை குறைப்பதற்காக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தை எதிர்த்து அப்போது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதன் காரணமாகத்தான் ஏழு பேர் விடுதலையில் இவ்வளவு காலங்கள் கடந்து போனது.
இவர்களின் விடுதலை விஷயத்தில் திமுக அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வருகிறது. நான் ஆளுநரை சந்திக்கும்போதெல்லாம் தொடர்ந்து ஏழு பேர் விடுதலை குறித்து வலியுறுத்துகிறேன். விரைவில் நல்ல முடிவை ஆளுநர் அறிவிப்பார் என்றார்.