Kathir News
Begin typing your search above and press return to search.

புதிய தலைமைச்செயலகம் கட்டியதில் தி.மு.க ஊழல்! பக்காவா பிளான் போட்டு 130 சதவீதம் மக்கள் பணத்தை சுருட்டிய நரித்தந்திரம்!

புதிய தலைமைச்செயலகம் கட்டியதில் தி.மு.க ஊழல்! பக்காவா பிளான் போட்டு 130 சதவீதம் மக்கள் பணத்தை சுருட்டிய நரித்தந்திரம்!

புதிய தலைமைச்செயலகம் கட்டியதில் தி.மு.க ஊழல்! பக்காவா பிளான் போட்டு 130 சதவீதம் மக்கள் பணத்தை சுருட்டிய நரித்தந்திரம்!

Muruganandham MBy : Muruganandham M

  |  26 Dec 2020 7:00 AM GMT

திமுக ஆட்சியில் புதிய தலைமைச்செயலகம் கட்டியதில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு மதிப்பீடு ரூபாய் 200 கோடி என்று கொடுத்து, ரூபாய் 425 கோடி Bill settle செய்கிறார்கள். மதிப்பீட்டிற்கும், உண்மையான தொகைக்கும் சற்று ஏறக்குறைய 10 முதல் 15 விழுக்காடு வித்தியாசம் இருக்கலாம். ஆனால், ஏறத்தாழ 130 மடங்கு அதிகமாக உள்ளது. இதுதான் ஊழல் என்று நாங்கள் சொல்கிறோம்.

எங்களைப் பார்த்து ஊழல் என்று சொன்னால், என்ன ஊழல் என்று சொன்னால் தானே நாங்கள் பதில் சொல்ல முடியும். இதை நான் ஊழல் என்று சொல்வதற்கு இதுவரை அதற்கு அவர் மறுப்பே சொல்லவில்லை.

நீதிமன்றத்திற்குச் சென்று தடையாணை வாங்கியிருக்கிறார். இரண்டாவது, TNRSP Phase-I உலக வங்கியிலிருந்து பணம் பெற்று அமல்படுத்தும் திட்டத்தை முதலில் திமுக ஆட்சியில்தான் கொண்டு வந்தார்கள்.

அப்போது ஆற்காடு முதல் திருவாரூர் வரையுள்ள சாலையின் மொத்த நீளம் 377.36 கிலோ மீட்டர். ஒப்பந்த தொகையின் மதிப்பு ரூபாய் 611.70 கோடி. கொடுத்தது ரூபாய் 773 கோடி.

இப்போது அவர்கள் வசமாக மாட்டிக்கொண்டார்கள். 26.43 விழுக்காடு அதிகரித்துக் கொடுத்துள்ளார்கள், இதுதான் ஊழல். நாகப்பட்டினம் முதல் கட்டுமாவடி வரையுள்ள 117.40 கிலோ மீட்டர் சாலையை மேம்படுத்த ஒப்பந்த மதிப்புத்தொகை ரூபாய் 198.77 கோடி.

ஆனால், 36.47 விழுக்காடு, அதாவது ரூபாய் 72.49 கோடி அதிகரித்து ரூபாய் 271.26 கோடி கொடுத்துள்ளார்கள். இது Schedule–Ïš-ல் குறிப்பிடப்பட்ட தொகையல்ல, வேலை செய்ய செய்ய அதிகரித்துக் கொடுத்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News