Kathir News
Begin typing your search above and press return to search.

"நான் ரெடி ! நீங்க ரெடியா" மதுபோதையில் குத்தாட்டம் போடும் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர்!

பழனியில் திமுக ஒன்றிய கவுன்சிலர் ஒருவர் நான் ரெடி நீங்க ரெடியா என்ற சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மக்கள் பணி செய்வதற்கு என்று திமுக மார்தட்டிக்கொள்ளும் வேளையில் தற்போது மதுபோதையில் பொது வெளியில் ஒரு கவுன்சிலர் குத்தாட்டம் போட்டுள்ளார்.

நான் ரெடி ! நீங்க ரெடியா மதுபோதையில் குத்தாட்டம் போடும் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர்!

ThangaveluBy : Thangavelu

  |  23 Nov 2021 1:11 PM GMT

பழனியில் திமுக ஒன்றிய கவுன்சிலர் ஒருவர் நான் ரெடி நீங்க ரெடியா என்ற சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மக்கள் பணி செய்வதற்கு என்று திமுக மார்தட்டிக்கொள்ளும் வேளையில் தற்போது மதுபோதையில் பொது வெளியில் ஒரு கவுன்சிலர் குத்தாட்டம் போட்டுள்ளார்.


பழனி தாலுகாவிற்குட்பட்ட திமுக ஒன்றிய கவுன்சிலர் ஒருவர் சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு மது போதையில் நான் ரெடி, நீங்க ரெடியா என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இதனை அங்கு இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


சமுதாயத்திற்கு எதாவது நன்மை செய்வேன் என்று சொல்லிவிட்டு கவுன்சிலராக மாறிய பின்னர், மதுவை குடித்துவிட்டு ஆட்டம், பாட்டத்தில் இறங்குவதுதான் உங்கள் விடியலா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின் இப்படித்தான் கட்சியின் ஒன்றிய கவுன்சிலரை வழிநடத்த சொல்லியுள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Source, Image Courtesy: Social Media

Next Story
கதிர் தொகுப்பு
Trending News