தி.மு.க கவுன்சிலரின் செயலால் முதியவர் தீக்குளிக்க முயற்சி - பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கண்டனம்!
தி.மு.க ஆட்சியில் தமிழகம் மெல்ல மெல்ல சட்டமற்றவர்களின் காடாக மாறி வருகிறது என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ட்வீட்.
By : Bharathi Latha
சென்னையில் தற்போது ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் ஒருவர் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. உடலில் பெட்ரோல் ஊற்றி கொண்டதால் சிறிது நேரம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தண்ணீரை ஊற்றி போலீசார் காப்பாற்றினர். சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. தி.மு.க கவுன்சிலர் ஒருவர் தனது வீட்டை இடித்து விடுவதாக மிரட்டி முதியவர் ஒருவர் திடீரென்று தீ குளிக்கும் சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் புகார் கொடுக்க வந்தவர் திடீர் என்று தனது உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் உடனடியாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலர்கள் முதியவரை தீ வைத்து கொள்ளவிடாமல் தடுத்து நிறுத்தி பத்திரமாக மீட்ட இருந்தார்கள். மேலும் இது குறித்து தற்கொலைக்கு முயன்றது ஏன்? என்று கேட்டபொழுது தான் ஆதம்பாக்கம் பகுதியில் வசிப்பதாகவும் அங்கு தனக்குச் சொந்தமான 50 வருட காலமாக வீட்டை இடித்து விடுவேன் என்று தி.மு.க உறுப்பினர் விரட்டுவதாகக் கண்ணீர் மல்கக் குற்றச்சாட்டு ஒன்றை வைத்தார்.
இதனை தொடர்ந்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் இது குறித்து வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "சென்னை ஆட்சியர் அலுவலகம் முன் மூத்த குடிமகன் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். இந்த மூத்த குடிமகன் வீட்டை தி.மு.க கவுன்சிலர் ஒருவர் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக ஆட்சியில் தமிழகம் மெல்ல மெல்ல சட்டமற்றவர்களின் காடாக மாறி வருகிறது" என குறிப்பிட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: Twitter Source