"தி.மு.க ஹனிமூன் டைம் எல்லாம் முடிச்சு போச்சு இனி பாருங்க" - சாட்டையை சுழற்றும் பா.ஜ.க சி.டி.ரவி !
Breaking News.
By : Mohan Raj
"தி.மு.க'வின் ஹனிமூன் காலம் முடிந்துவிட்டது" என பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி. ரவி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் சி.டி.ரவி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தி.மு.க'வின் ஹனிமூன் காலம் முடிந்துவிட்டது. தமிழகத்துக்கு பல திட்டங்களை அளித்தாலும் தி.மு.க அரசு மத்திய அரசுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. அவர்களுக்கு நேர்மறையான எண்ணம் கிடையாது. மத்திய அரசும் பாஜகவும் மாநில அரசுகளுக்கு 100 சதவீதம் ஆதரவு அளித்து வருகிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகம் அபாயகரமாக மாறிவருகிறது. அண்ணா பிறந்த நாளில், சிறையில் உள்ள குற்றவாளிகள், தீவிரவாதிகள் 700 பேரை விடுதலை செய்யும் அபாயகரமான முடிவுக்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவிக்கிறது" என கூறினார்.
மேலும் தொடர்ந்த அவர், "குடியுரிமைச் சட்டம் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. ஆனால், முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற கருத்தை தி.மு.க பரப்பி வருகிறது" என்றார் அவர்.