ஸ்டாலின் உத்தரவெல்லாம் வெறும் வாய் பேச்சு தான் - கோவையில் தி.மு.க தலைமையை லெப்ட் அண்டு ரைட் வெளுத்து வாங்கும் பெண் நிர்வாகிகள்!
DMK denies ticket to mayor aspirant in Coimbatore, cadre taken by surprise
By : Kathir Webdesk
கோவையில் உள்ளாட்சி தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல், பல ஆதரவாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 100 வார்டுகளில் 74 வார்டுகளில் அக்கட்சி போட்டியிடுகிறது.
மகளிரணி மாவட்ட துணை செயலாளர் மீனா ஜெயக்குமாரி மேயர் பதவிக்கு போட்டியிடுவார் என பரவலாக கூறப்பட்டு வந்த நிலையில் அவருக்கு சீட் மறுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே மீனா வார்டு 57ல் தேர்தல் அலுவலகத்தை திறந்து பிரச்சாரம் செய்யத் தயாரானார். ஆனால், அந்த வார்டில் சாந்தாமணியை கட்சி நிறுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் திமுக கிராமப்புற கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியின் மகள் நிவேதா (22) அக்கட்சியால் நிறுத்தப்பட்ட இளைய வேட்பாளர் ஆவார். முதுகலை மாணவியான இவர், வார்டு 97ல் போட்டியிடுகிறார். வார்டு 52ல், தி.மு.க., நகர கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் என்.கார்த்திக்கின் மனைவி லட்சுமி இளஞ்செழியன் களமிறங்கியுள்ளார்.
வார்டு 77ல் செல்வபுரத்தில் வார்டு செயலாளர் மதியழகன் தலைமையில் கட்சியினர் ராஜலட்சுமியை வேட்பாளராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்த்து போராட்டம் நடத்தினர். இதேபோல், வார்டு 84ல் ஜிஎம் நகர் சந்திப்பில் வேட்பாளரை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டது.
மேலும், பொள்ளாச்சியில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் குறித்து ஏமாற்றம் தெரிவித்து, மாவட்ட மகளிரணி செயற்பாட்டாளர் சண்முக பிரியா, சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்றை வெளியிட்டார். மகளீருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தாலும், அக்காட்சி நிர்வாகிகளின் உறவினர்களுக்கே பெரும்பாலும் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. மகளீர் அணி நிர்வாகிகள் கண்டுகொள்ளப்படவில்லை.