Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - ரஜினியின் அரசியல் பிரவேசத்தால் வேகமெடுக்கும் தி.மு.க தேர்தல் பணிகள்.!

தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - ரஜினியின் அரசியல் பிரவேசத்தால் வேகமெடுக்கும் தி.மு.க தேர்தல் பணிகள்.!

தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - ரஜினியின் அரசியல் பிரவேசத்தால் வேகமெடுக்கும் தி.மு.க தேர்தல் பணிகள்.!

Mohan RajBy : Mohan Raj

  |  13 Dec 2020 10:45 AM GMT

திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பிரவேசத்தையொட்டி தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்கள் செயல்பாடுகளையும், நடவடிக்கைகளையும் துரிதபடுத்தி வருகின்றன அந்த வகையில் மற்ற கட்சிகளை விட தி.மு.க வழக்கத்திற்கு மாறாக தனது நடவடிக்கை மற்றும் செயல்பாடுகளை வேகப்படுத்தி வருகிறது.

தற்பொழுது திரு.ரஜினிகாந்த் அவர்களின் கட்சி அறிவிப்பு மற்றும் சுற்றுப்பயணத்திற்கு முன் தி.மு.க'வின் சுற்றுப்பயணம் மற்றும் பணிகளை வேகமெடுக்கும் செயல்களை தி.மு.க தலைமை துவங்கிவிட்டது.

இதன் காரணமாக தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, "வருகிற 20'ம் தேதி காலை 10 மணிக்கு, மாவட்ட, மாநகர செயலாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும். அப்பொழுது மாவட்ட, மாநகர செயலாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், பொறுப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இந்த கூட்டத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் பற்றி விவாதிக்கப்படும்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News