உருட்டுக்கட்டையால் ரியல் எஸ்டேட் அதிபரை போட்டுதள்ளிய தி.மு.க ஒன்றிய செயலாளர் !

வீடு புகுந்த ரியல் எஸ்டேட் அதிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவ வழக்கில் தி.மு.க நிர்வாகியை தேடும் காவல் துறை.
திருச்சி மாவட்டம் செங்கதிர் சோலையைச் சேர்ந்த சிவக்குமார் (எ) சோலை சிவா. இவர் ரியல் எஸ்டேட் அதிபராக இருந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். நேற்று மாலை சிவக்குமார் தனது வீட்டில் இருந்தபோது, திடீரென வந்த 2 பேர் சவுக்கு கட்டைகளால் சிவக்குமாரை சரமாரியாக தாக்கினர். இதில், தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாக்கியதை அடுத்து ரத்த வெள்ளத்தில் சிவக்குமார் சரிந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
தொடர்பாக அவரது மனைவி மைதிலி, சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் விசாரணையில் பிரபாகரன், தீபக் மற்றும் கொலைக்குக் காரணமான தி.மு.க ஒன்றிய செயலாளர் கதிர்வேல் உள்பட 4 பேர் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, தி.மு.க ஒன்றிய செயலாளர் கதிர்வேல் உள்பட 4 பேரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.