தி.மு.க அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பணப்பட்டுவாடா குறித்து பேச்சு! வெளியான வீடியோவால் பரபரப்பு!
By : Dhivakar
தி.மு.க அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர் பணப்பட்டுவாடா குறித்து பேசிய காணொளி இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அனைத்துக் கட்சி முக்கிய பிரமுகர்களும், தலைவர்களும் தங்களின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் பல நகர்ப்புற பகுதிகளில் ஆளும் தி.மு.க'விற்கு எதிரான அலை வீசி வருவது தி.மு.க'வினரை சற்றே கலக்கமடையச் செய்துள்ளது. ஆகையால் பல இடங்களில் தேர்தல் விதிமீறல்களில் தி.மு.க'வினர் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதன் வரிசையில், தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதியில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில், தி.மு.க தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தில் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ'வான டேவிட் செல்வின், உன்னதமான தேர்தல் வியூகம் ஒன்றை, அக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சித் தொண்டர்களிடம் விளக்கிக் கொண்டிருந்தார்.
அவர் விளக்கிய தேர்தல் வியூகம் இது தான் "எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம்! அவன் 500 ரூபாய் கொடுத்தால், நாம் ஆயிரம் ரூபாய் கொடுப்போம்! அவன் ஆயிரம் ரூபாய் கொடுத்தால், நாம் .2000 ருபாய் கொடுப்போம்! எதைப் பற்றியும் யோசிக்க வேண்டாம் தேர்தல் பணியின் போது வேட்பாளரை கொண்டு வீடு வீடாக சென்று வாக்கு சேகரியுங்கள்"
இக் காணொளி சமூக வலைத்தளத்தில் பரவலாக பரவி வரும் நிலையில், இதைப் பார்த்த இணையதள வாசிகள் தி.மு.க மீது தேர்தல் விதிமீறல் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்து வருகின்றனர்