பெட்ரோல் மீதான வரியை குறைக்காத தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க. போராட்டம்: அண்ணாமலை அறிவிப்பு!
பெட்ரோல், டீசல் மீதான வரியை உடனடியாக குறைக்க திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் 22ம் தேதி பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
By : Thangavelu
பெட்ரோல், டீசல் மீதான வரியை உடனடியாக குறைக்க திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் 22ம் தேதி பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இது பற்றி தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்திப்பில் கூறியதாவது: வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரண நிதியை அளிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின தெரிவித்துள்ளார். ஆனால் கடந்தகாலத்தில் எதிர்க்கட்சித்தலைவராக இருந்தபோது நிவர் புயல் ஏற்பட்டது. அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஸ்டாலின் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறினார்.
தற்போது முதலமைச்சர் மழை வெள்ள பாதிப்புகளை ஒரு நிகழ்ச்சியாக (அதாவது டூரிஸ்ட் பேக்கேஜ் மாதிரி) நடத்தி வருகிறார். மழை வெள்ளத்தை பார்வையிட செல்கின்ற முதலமைச்சர் விவசாயிகளின் நிலங்களில் அழுவி கிடக்கும் நெற்பயிர்களை கைகளால் எடுத்து பார்த்தால்தான் ஒரு விவசாயியின் வேதனையை தெரிந்து கொள்ள முடியும். மேலும், தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வலியுறுத்தி பாஜக சார்பில் நவம்பர் 22ம் தேதி மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெறும். அது மட்டுமின்றி உடனடியாக மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.5000 நிவாரண நிதி வழங்க வலியுறுத்தி 19ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Source: Dinamalar
Image Courtesy:Twiter