தோற்றால் நம்மை அடிமை என்பார்கள்: தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பேச்சு.!
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி முன்னணியில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் திமுக பின்தங்கியே உள்ளது. இதற்கு கடந்த காலம் திமுக ஆட்சியை மக்கள் சிந்தித்து பார்க்கின்றனர். இதன் காரணமாக திமுகவினர் செல்லும் இடங்களில் மக்களின் ஆதரவு இன்றி திரும்பி செல்வதை பார்க்க முடிகிறது.

அதே போன்ற நிலை தற்போது வேலூரிலும் நடந்து வருகிறது. திமுகவினரை மக்கள் கண்டு கொள்ளாமல் செல்வதைதான் பார்க்க முடிகிறது. இதனிடையே திமுகவின் உட்கட்சி பூசலை பார்த்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.
வேலூர் திமுக வேட்பாளர் கார்த்திகேயன் அறிமுக கூட்டத்தில் துரைமுருகன் பேசினார். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாமல் உள்ளோம். உங்கள் உடலில் ஓடுவது திமுக ரத்தம் என்றால், நமக்குள் நடக்கும் சண்டையை நிறுத்துங்கள். பொதுச்செயளார் என்ற முறையில் சொல்கிறேன் தோல்விக்கு வழி ஏற்படுத்தி விடாதீர்கள்.
தோல்வியை தழுவினால் யாராக இருந்தாலும், எவ்வளவு பெரியா ஆளாகு இருந்தாலும், கட்சியில் இருந்து தூக்கி எறியப்படுவீர்கள் என்று கத்தி பேசிய சம்பவம் அங்கு கூடியிருந்தவர்களை ஆச்சரியமாக பார்க்க வைத்துள்ளது.
மேலும், திமுகவில் இருக்கும் வரைதான் மரியாதை. இல்லை என்றால் நாம் அனாதை பிணம். வெற்றி பெற்றால் வீரர்கள் எனவும், தோல்வி அடைந்தால் நம்மை அடிமை என்பார்கள். இதனால் கூட்டத்திற்கு சென்றிருந்த உபிக்கள் அனைவரும் கண்களில் இருந்து சாரை சாரையாக கண்ணீர் வந்தது.
மீண்டும் ஆட்சியை பிடிக்க மாட்டார்கள் என்று வேலூர் அதிமுகவினர் பேசி வருகின்றனர். இதன் காரணமாகத்தான் துரைமுருகன் தனது கட்சி நிர்வாகிகள் மத்தியில் இப்படி பேசினார் எனவும் கூறினர்.