Kathir News
Begin typing your search above and press return to search.

குப்பை கிடங்கில் கை வைத்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் தி.மு.க'வினர் - கோவை வெள்ளலூர் பகுதி அட்ராசிட்டிஸ்

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் பிரச்சனை தொடர்பாக மேயர் எழுப்பிய கேள்விக்கு அதிகாரி கவுன்சிலர்கள் தான் காரணம் என பதில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குப்பை கிடங்கில் கை வைத்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் தி.மு.கவினர் - கோவை வெள்ளலூர் பகுதி அட்ராசிட்டிஸ்
X

Mohan RajBy : Mohan Raj

  |  8 Dec 2022 8:14 AM IST

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் பிரச்சனை தொடர்பாக மேயர் எழுப்பிய கேள்விக்கு அதிகாரி கவுன்சிலர்கள் தான் காரணம் என பதில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கு அனுமதி இல்லாமல் குப்பை எடுப்பது குறித்து அதிகாரிகளிடம் இதற்கு யார் பொறுப்பு என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சுகாதார அதிகாரி திருமால் இதை ஒழுங்குபடுத்த முன்பே செந்தில் பாஸ்கரன் என்ற உயரதிகாரிக்கு கடிதம் எழுதினேன் குப்பை அள்ளுவதை நிறுத்தி சொல்லி உத்தரவு போட்டோம் கவுன்சிலர்கள் பெயரை சொல்லி உள்ளே வருகின்றனர் என கூறினார்.

அவரிடம் கவுன்சிலர்கள் பெயரை சொல்லுங்கள் என மேயர் மீண்டும் கேட்டதும் தயங்கிய அவர் 'நான் பெயரைச் சொல்கிறேன் என 100 வது வார்டு கவுன்சிலர் கார்த்திகேயன், துணை மேயர் பெயரை சொல்கின்றனர்' என தயக்கத்துடன் கூறினார். குப்பை பொறுக்க டெண்டர் விடப்பட்டிருக்கிறதா? அனுமதிக்கலாமா என மேயர் கல்பனா மீண்டும் கேள்வி எழுப்பினார்.

அப்பாவிகளை வைத்து பிளாஸ்டிக் இரும்பு குப்பைகளை எடுத்து தி.மு.க'வினர் தினசரி லட்சக்கணக்கில் பணம் பார்க்கின்றனர், இப்போது உட்கட்சி பூசலால் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொள்கின்றனர் என அங்கு தகவல் பரவி வருகிறது.


Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News