முதலமைச்சர் உத்தரவை காற்றில் பறக்க விட்ட திருச்சி தி.மு.க! சாலையின் நடுவே மக்களை அச்சுறுத்தும் வகையில் கொடி கம்பங்கள்!
திருச்சியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்களை திமுக அரசு நடத்தி வருகிறது. இதில் பங்கேற்க வரும் அமைச்சர்களை உற்சாகப்படுத்துவதற்காக சாலையின் நடுவில் அக்கட்சியின் கொடிக் கம்பங்களை நட்டு வைத்துள்ள நிலையில் வாகன ஓட்டிகள் பயந்து கொண்டே சாலையை கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
By : Thangavelu
திருச்சியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்களை திமுக அரசு நடத்தி வருகிறது. இதில் பங்கேற்க வரும் அமைச்சர்களை உற்சாகப்படுத்துவதற்காக சாலையின் நடுவில் அக்கட்சியின் கொடிக் கம்பங்களை நட்டு வைத்துள்ள நிலையில் வாகன ஓட்டிகள் பயந்து கொண்டே சாலையை கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் அமைச்சர்கள், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாவட்ட ஆட்சியர், பிற அதிகாரிகள் கலந்து கொண்டு வருகின்னறர். அதே போன்று நகர் பகுதியான இலால்குடி பகுதி மற்றும் தனியார் கல்லூரிகளில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை மனுவாக அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அமைச்சர்களை வரவேற்பதற்காக திமுக நிர்வாகிகள் திருச்சி நகர் பகுதிகள் முழுவதிலும் கொடி கம்பங்களை நட்டு வைத்துள்ளனர். அது மட்டுமின்றி சாலையின் நடுவே ஆழமான துளையிட்டும் அதில் கொடி கம்பங்களை நட்டு வைத்துள்ளனர்.
இது போன்று நட்டு வைத்ததால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியது மட்டுமின்றி, எங்கே நம்மீது விழுந்து விபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்திலும் கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் முதலமைச்சர் ஸ்டாலின் சாலைகளில் கொடிக்கம்பங்களை நட்டு வைத்து வரவேற்க வேண்டாம் என்ற உத்தரவை பிறப்பித்திருந்தார். ஆனால் அவரின் உத்தரவை திருச்சி திமுகவினர் காற்றில் பறக்கவிட்டனர் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Source, Image Courtesy: abp