உங்களுக்காக குடியுரிமை திருத்த சட்டத்தையே எதிர்த்தது இந்த மு.க.ஸ்டாலின் - இப்தார் விழாவில் முதல்வரின் உருக்கமான பேச்சு!
By : Thangavelu
இஸ்லாமியர்களுக்காக குடியுரிமை திருத்த சட்டத்தையே எதிர்த்தது இந்த மு.க.ஸ்டாலின்தான் என்று இப்தார் விழாவில் முதலமைச்சர் உருக்கமாக பேசியுள்ளார். சென்னை, திருவான்மியூரில் ஒரு அரங்கில் திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பாக ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: இஸ்லாமியர்கள் பசியையும், தாகத்தையும் மறந்து நோன்று இருக்கின்றனர். இதனை ஒரு கடமையாக நினைத்து செய்து வருகின்றீர்கள். சிறுபான்மையினருக்காக திமுக தலைவர் கருணாநிதியின் நட்பு என்பது காலங்காலமாக தொடர்கிறது. அந்த நட்பு தற்போதும் தொடர்ந்து வருகிறது. இதனை யாராலும் கலைத்து விட முடியாது.
மேலும், திமுக ஆட்சி சமயத்தில் முதன் முறையாக சிறுபான்மை ஆணையம், சிறுபான்மை நலக்குழு, சிறுபான்மை நல பொருளாதார குழு அமைக்கப்பட்டது. கலைஞர் ஆட்சியில்தான் இஸ்லாமிய மக்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அவரது வழியில் தற்போது ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறோம். அது மட்டுமின்றி குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றியது இந்த மு.க.ஸ்டாலின்தான். இவ்வாறு அவர் பேசினார்.
Source: Asianetnews
Image Courtesy: Dinamani