Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா பாதிப்பு.!

தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா பாதிப்பு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  8 April 2021 12:49 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்கள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்றது. அந்த சமயத்தில் கொரோனா பாதிப்பும் அதிகரிக்க தொடங்கியது என்றே கூறலாம்.

பிரச்சாரத்தின்போது தொண்டர்கள் யாரும் முககவசம் அணியாமல் இருந்தனர். அந்த சமயத்தில் அதிகம் பேருக்கு தொற்று பரவியிருக்கும்.




அதே போன்று தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த வகையில் தேமுதிக துணைபொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.

இந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக துரைமுருகன் தன்னை தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். அவர் 2வது டோஸ் தடுப்பு மருந்து செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News