Kathir News
Begin typing your search above and press return to search.

2400 தேயிலை தோட்டத் தொழிலாளர் குடும்பத்தை வஞ்சிக்கும் தி.மு.க அரசு - களத்தில் போராட இறங்கும் அண்ணாமலை

தேயிலை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்ற உத்தரவிட்ட தமிழக அரசை கண்டிட்டு நீலகிரி மாவட்டம் கூடலூரில் இந்த மதம் 20ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

2400 தேயிலை தோட்டத் தொழிலாளர் குடும்பத்தை வஞ்சிக்கும் தி.மு.க அரசு - களத்தில் போராட இறங்கும் அண்ணாமலை
X

Mohan RajBy : Mohan Raj

  |  17 Nov 2022 9:09 AM IST

தேயிலை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்ற உத்தரவிட்ட தமிழக அரசை கண்டிட்டு நீலகிரி மாவட்டம் கூடலூரில் இந்த மதம் 20ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இலங்கையிலிருந்து அழைத்துவரப்பட்ட இந்திய தமிழ் குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிக்க நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் ஆகிய இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். இவர்களில் சுமார் இன்று 15,076 மீள் குடியேற்ற குடும்பங்கள் உள்ளன. இவர்கள் இன்றளவும் தமிழக அரசை மட்டுமே நம்பி வாழ்கின்றனர்.

ஆனால் TANTEA வசமுள்ள நிலத்தின் குறிப்பிடத்தக்க பகுதியை TANTEA நிறுவனத்திற்கு மேலும் நஷ்டம் ஏற்படாமல் இருக்க வனத்துறையிடமே திருப்பி ஒப்படைக்க பரிந்துரைத்துள்ளனர். நடுவர் கோட்டம், நடுவட்டம் கோட்டம், வால்பாறை கூட்டம் குன்னூர் கோட்டம் கோத்தகிரி கோட்டம் பாண்டியர் கோட்டம், செங்கோடு கோட்டம், நெல்லியாலம் கோட்டம், சேரம்பாடி கோட்டம் என மொத்தம் 2,152 ஹெக்டேர் நிலம் ஒப்படைக்கப்படும் என TANTEA நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தனது பரிந்துரையில் கூறி இருந்தார்.

அதன்படி TANTEA நிறுவனத்தின் பரிந்துரைகளை ஏற்று நிலங்களை மீண்டும் வனத்துறையிடம் ஒப்படைக்க தமிழக அரசு அக்டோபர் 3 2022-ம் தேதி ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது அரசு. இந்த முடிவால் அப்பாவி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கவலைக்கிடமாக உள்ளது TANTEA நிர்வாகம் வேலைக்காக வேறு தோட்டங்களுக்கு செல்லாதவர்கள் விருப்ப வாய்ப்பு வேண்டும் என்பதால் 2400 குடும்பங்கள் மற்றும் 15 ஆயிரம் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. தாயகம் திரும்பியதிலிருந்து இந்த தேயிலை தோட்டங்களை பணிபுரியும் இந்தியர்கள் பெரிதாக எதுவும் சம்பாதிக்கவில்லை அதற்காக போராடவும் இல்லை.

மேலும் அகதிகளுக்கு அரசாங்கம் அளித்த சிறிய குடியிருப்பில் அவர்கள் தொடர்ந்து வசித்து வருகிறார்கள். அவர்களுக்காக கட்டப்பட்ட வீடுகளை காலி செய்யும் படி தற்போது கூறி வருகிறார்கள் தி.மு.க அரசு, தி.மு.க அரசின் இந்த செயலை கண்டித்து அவர்களுக்கு ஆதரவாக ஏலகிரி மாவட்டம் கூடனூரில் இந்த மாதம் 20 ஆம் தேதி வரும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை தமிழக பாரதிய ஜனதா கட்சி முன்னெடுக்கும் அதில் நானும் நேரடியாக கலந்து கொள்கிறேன்' என அண்ணாமலை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Source - Asianet News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News