தி.மு.க. ஆட்சியில் எப்போது மின்சாரம் வரும் போகும் என்றே தெரியல.. ஜெயக்குமார் கிண்டல்.!
ஆனால் திமுக ஆட்சியில் எப்போது மின்சாரம் வரும், போகும் என்றே தெரியாமல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
By : Thangavelu
திமுக ஆட்சியில் எப்போது மின்சாரம், வரும் போகும் என்றே தெரியவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை, பட்டினப்பாக்கத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த திமுக ஆட்சியில் மாநில உரிமைகள் அனைத்தும் பறிபோனது. தற்போது திமுக ஆட்சி வந்துள்ள நிலையில் நிலை நாட்டுவாரா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. கொரோனா தடுப்பூசி போடுவதற்கு எங்கு சென்றாலும் இல்லை என்ற நிலையே தமிழகத்தில் தற்போது நிலவி வருகிறது.
மேலும், அவர் பேசும்போது, தடுப்பூசிகளை பெறுவதற்கு ஏன் தமிழக அரசு முயற்சி செய்யவில்லை. தற்போது வரை ஒரு கோடி பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் போட வேண்டியது 5 கோடி உள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் மின்வெட்டு நிலவுகிறது. அதிமுக ஆட்சியில் மின்தடையை இல்லாத நிலை இருந்தது. அதற்கான முயற்சியை தங்கமணி எடுத்திருந்தார்.
ஆனால் திமுக ஆட்சியில் எப்போது மின்சாரம் வரும், போகும் என்றே தெரியாமல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.