வானிலை எச்சரிக்கை சமயத்தில் 'ஜெய்பீம்' படம், மழையில் மக்கள் அவஸ்தை படும் நேரத்தில் ஆய்வு நாடகம் - இது விளம்பர அரசு !
By : Mohan Raj
ஒருநாள் மழைக்கே சென்னையை தத்தளிக்க விட்டு மழைநீரில் இறங்கி ஆய்வு செய்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தனது பாணியிலான நாடகத்தை துவங்கிவிட்டார்.
சென்னையில் நேற்று முதல் விடாமல் விடிய விடிய மழை பெய்தது. இந்த மழை இன்று காலையிலும் நீடித்ததால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சாலைகளில் உள்ள மழைநீர் வடிகால் நிரம்பி ரோட்டுக்கு மேலே வழிந்தோடியது. பாதாள சாக்கடையும் மழைநீருடன் கலந்து ரோட்டில் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக வாகன போக்குவரத்தும் பல இடங்களில் ஸ்தம்பித்தது. தொடர்ந்து மழைபெய்த வண்ணம் இருந்ததால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சென்னை நகரமே இன்று காலை ஸ்தம்பித்தது.
ஆனால் கடந்த வாரமே வானிலை முன்னெச்சரிக்கையாக கன மழை இருக்கும் என தெரிவித்த போதிலும் அதற்கு நடவடிக்கைகள் எடுக்காமல் 'ஜெய்பீம்' படம் பார்த்து கருத்து சொல்லிவிட்டு தற்பொழுது ஒரு நாளை மழைக்கே சென்னை தத்தளிக்கும்போது முதல்வர் ஸ்டாலின் எழும்பூர் பகுதியில் தேங்கிய மழைநீரை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து வடசென்னை பகுதிகளையும் பார்வையிட்டார்.
கடந்ழ வாரமே சென்னையில் மழை நீர் தேங்கும் பகுதிகளை முன்னெச்சரிக்கையாக சரி செய்யாமல் மழையில் மக்களை அவஸ்தை பட வைத்துவிட்டு தற்பொழுது மழைநீரில் நாடகம் ஆட துவங்கிவிட்டார் முதல்வர் ஸ்டாலின். இவர் எதிர்கட்சியாக இருக்கும் போது ஆகும் கட்சியான அ.தி.மு.க'வின் நடவடிக்கைகள் குறித்து பக்கமாக அறிக்கைகள் விட்டது குறிப்பிடதக்கது.