'தி.மு.க 4 வருஷமா ஆட்சியில் இருக்க போகிறது?' - சஸ்பென்ஸ் வைத்த அண்ணாமலை
'தி.மு.க இன்னும் நான்கு வருடம் ஆட்சியில் இருக்கும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் விரைவில எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்' என அண்ணாமலை சஸ்பென்ஸ் வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

By : Mohan Raj
'தி.மு.க இன்னும் நான்கு வருடம் ஆட்சியில் இருக்கும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் விரைவில எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்' என அண்ணாமலை சஸ்பென்ஸ் வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நடைபெற இருக்கும் பா.ஜ.க'வின் நிகழ்ச்சி ஒன்றுக்காக கலந்து கொள்வதற்காக திருச்சி வந்தார் அண்ணாமலை அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் பேசியதாவது, 'மின் கட்டணம் உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என தி.மு.க அரசு கூறி வருகிறது இதற்கு செய்தியாளர் சந்திப்பில் நான் விளக்கம் கொடுத்த பிறகு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை காணவில்லை மத்திய அரசின் மீது பழி போடுவது மட்டும் தான் தமிழக அரசின் வேலையாக இருக்கிறது விலைவாசி உயர்வால் அமைச்சர்களோ மற்றவர்களோ பலனடைவார்களே தவிர விவசாயிகள் பலம் அடைவதில்லை'.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மௌனம் காப்பது தி.மு.க தான் அங்கு கலவரம் நடக்க தி.மு.க'வின் மெத்தனம், காவல்துறையின் செயலின்மைதான் காரணம் பா.ஜ.க'வின் அரசை அறிக்கைக்கு பிறகு தான் சி.பி.சி.ஐ.டி விசாரணை தொடங்கி இருக்கிறது 4 நாட்களாக பள்ளித்துறை அமைச்சரை காணவில்லை அவர் எங்கு சென்றார் என்பதை நீங்கள் தான் கேட்க வேண்டும்' என்றார்.
மேலும் பேசிய அவர், 'அமைச்சர்கள் ஏதோ வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் சொந்த ஊருக்கே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த ஊழல் பட்டியலில் வெளியிட்ட இந்த ஆட்சியை கவிழ்ந்துவிடும் பொறுமையாக இருப்போம் அவர்கள் நான்கு வருடம் ஆட்சியில் இருப்போம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் விரைவில் எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்' என சஸ்பென்ஸ் வைத்தார்.
