Kathir News
Begin typing your search above and press return to search.

இனி ஸ்டாலினை நம்பி பயனில்லை என உதயநிதியை இறக்கும் தி.மு.க தரப்பு - 100 நாள் உதயநிதி பிரச்சாரம்.!

இனி ஸ்டாலினை நம்பி பயனில்லை என உதயநிதியை இறக்கும் தி.மு.க தரப்பு - 100 நாள் உதயநிதி பிரச்சாரம்.!

இனி ஸ்டாலினை நம்பி பயனில்லை என உதயநிதியை இறக்கும் தி.மு.க தரப்பு - 100 நாள் உதயநிதி பிரச்சாரம்.!

Mohan RajBy : Mohan Raj

  |  20 Nov 2020 8:45 AM GMT

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் வரும் வேளையில் தங்கள் கட்சி ஆட்சிக்கு வர கூட்டணி, தேர்தல் அறிக்கை, சுற்றுப்பயணம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக தமிழர்கள் புறக்கணித்த தி.மு.க இந்தமுறை எப்படிப்பட்டாவது ஆட்சி பீடத்தில் அமருவதில் முனைப்பு காட்டி வருகிறது.

கட்சியை விளம்பரபடுத்த பணம், கூட்டணி கட்சிகளை தக்க வைக்க பணம், வாக்குகளை விலைக்கு வாங்க பணம் என 2021 தேர்தலை எப்படியாவது தன்வசம் ஆக்கிட தி.மு.க முனைப்பு காட்டி வருகிறது.

இதில் கருணாநிதி இறந்த பிறகு தி.மு.க'விற்கு மக்கள் மத்தியில் மதிப்பு மட்டுமல்லாது நம்பகத்தன்மை குறைந்தது அரசியல் உலகில் யாரும் மறுக்கமுடியாத உண்மை.

கருணாநிதி'க்கு பிறகு திறமையானவர்களை ஓரம்கட்டி கருணாநிதி'க்கு பிறந்தவர் என்ற ஓரே தகுதியை வைத்து தி.மு.க தலைவர் பதவியை பெற்ற ஸ்டாலினின் நடவடிக்கைகள் தி.மு.க'வினருக்கே பிடிக்கவில்லை.

கட்சியில் குடும்பத்தினர் மட்டுமே பதவியை அனுபவிக்க வேண்டும் என நினைப்பது, கட்சிக்காக நாயாக உழைத்தவர்களை விட பணம் படைத்தவர்களை முன்னிருத்துவது, கள ரீதியாக என்ன நடக்கிறது என்று தெரியாமல் வெறும் அறிக்கை அரசியலை செய்வது, எங்கு சென்றாலும் உளருவது, தமிழகத்தின் பெரும்பான்மையான இந்து சமுதாய மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளது, மக்களுக்கு வரும் நல்ல திட்டங்களை மலிவான அரசியல் காரணங்களுக்காக எதிர்ப்பது என தி.மு.க தலைவர் ஸ்டாலினின் அவர்களின் மதிப்பு மக்கள் மத்தியில் சுத்தமாக இல்லாமல் போய்விட்டது.

இதனை தாமதமாக உணர்ந்து கொண்ட தி.மு.க இனி ஸ்டாலினை தி.மு.க'வின் முகமாக மக்கள் மத்தியில் நிறுத்தினால் தி.மு.க'வினரே ஓட்டு போடமாட்டார்கள் என உணர்ந்து தற்பொழுது உதயநிதியை களத்தில் முன்னிருத்த திட்டங்களை வகுத்து பணிகளை துவங்கியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று முதல் 100 நாள் பிரச்சார பயணத்தை மறைந்த முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளையில் இருந்து துவக்குகிறார்.

நாகை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். வரும் 27 ஆம் தேதி தனது பிறந்தநாளையொட்டி, சென்னை திரும்பி தலைவர் மற்றும் தொண்டர்களை சந்திக்கிறார். இதனைத் தொடர்ந்து, 28 ஆம் தேதி திருச்சியில் தொடங்கி டிசம்பர் 1 ஆம் தேதி வரை பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

என்று முதற்கட்டமாக திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஸ்டாலின் உடல்நிலையை காரணம் காண்பித்து அவரால் வர இயலாத சூழல் என மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய தி.மு.க தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News