திமுக தலைவருக்கு இந்து கடவுள் பிடிக்காது.. கன்னியாகுமரியில் இப்படி ஒரு போஸ்டர்.. எப்படி எல்லாம் நடிக்கிறதா இருக்கு.!
திமுக தலைவருக்கு இந்து கடவுள் பிடிக்காது.. கன்னியாகுமரியில் இப்படி ஒரு போஸ்டர்.. எப்படி எல்லாம் நடிக்கிறதா இருக்கு.!
By : Kathir Webdesk
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு 100 நாள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதாவது தேர்தல் தேதி அறிவிப்பு வருவதற்குள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதுதான் 100 நாள் திட்டமாகும்.
ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பலருக்கு இந்து கடவுளை பிடிக்காது. அதே போன்று அவரது மகன் உதயநிதியும் கடவுள் மறுப்பு கொள்கையை கடைபிடித்து வருகிறார்.
இந்நிலையில், திமுக கீழ் மட்டத்தில் இருக்கும் ஒரு சிலர் இந்து கடவுள்களை வணங்குவதை எங்கோ ஒரு சில இடத்தில் காண முடிகிறது. அதே போன்று கன்னியாகுமரியில் திமுக மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் நாஞ்சில் அ.சங்கர் என்பவர் வித்தியாசமான போஸ்டரை அடித்துள்ளார்.
அதில், தமிழ் கடவுள் வேலவன் அருளோடு கந்த சஷ்டி தினத்தில் தமிழக உரிமைகளை காக்க தமிழ் மக்களின் நலன் காக்க தமிழகத்தை மீட்டெடுக்க உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தமிழகம் முழுவதும் தொடர் பிரச்சாரம் சிறக்க வாழ்த்துக்கள் என்று அச்சடிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்குவதால் இந்துக்களின் ஓட்டுகளை வாங்குவதற்கு இப்படி எல்லாம் போஸ்டர் அச்சடிக்கப்படுகிறது என்று கன்னியாகுமரி இந்துக்கள் பேசி கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.