வேளாண் சட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினின் குட்டு அம்பலம்..!
வேளாண் சட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினின் குட்டு அம்பலம்..!
By : Kathir Webdesk
மத்திய அரசு வேளாண் சட்டத்தில் சில திருத்தங்களை செய்து புதிய சட்டமாக இயற்றியது. இதற்கு பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் ஆதரவு தெரிவித்தனர். பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட ஒரு சில மாநில விவசாயிகள் மட்டுமே போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டமும் அவர்கள் செய்யவில்லை, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்களின் அரசியல் சுயலாபத்திற்காக தூண்டி விடுகிறது. மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு போதுமான அளவில் விளக்கம் அளித்துள்ளது. வேளாண் சட்டத்தால் அதிகளவு லாபமே கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. அதே போன்று தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் விவசாயிகளுக்கு தவறான புரிதலை தெரிவித்து வருகிறார். வேளாண் சட்டத்தால் மிகப்பெரிய ஆபத்து வருகிறது என அரசியல் லாபத்திற்காக தமிழக விவசாயிகளை குழப்பி வருகின்றார்.
தற்போது அவரின் குட்டு வெளிப்பட்டு வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் வேளாண்மைக்கென்று தனியாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
வேளாண் பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்கான ஒரு புதிய கொள்கை உருவாக்கப்படும். இந்த கொள்கையின் அடிப்படையில் தமிழக வேளாண் உற்பத்திப் பொருள்களை இந்திய மற்றும் சர்வதேச அளவில் சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வேளாண் பொருள் உற்பத்தியாளர்கள் இடைத்தரகர்கள் இன்றித் தாங்கள் உற்பத்தி செய்த பொருள்களைச் சந்தை விலைக்கு ஏற்ப விற்பனை செய்து பயன்பெறுவதற்கு உதவும் வகையில் உற்பத்தியாளரையும், வாங்குபவரையும் இணைப்பதற்கு அரசும், உற்பத்தியாளர்களும் இணைந்து நிர்வகிக்கும் வேளாண் விளைபொருள் பரிவர்த்தனை அமைப்பு உருவாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
திமுகவை பொறுத்தவரை விவசாயிகளை குழப்பம் அடைய செய்து அவர்களிடம் இருந்து ஓட்டு பெறுவதற்கே தற்போது விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டது என கூறிவருகின்றனர். அவர்களின் குட்டு விரைவில் விவசாயிகளுக்கு தெரியவரும், வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு சரியான பாடத்தை புகுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.