Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க மூத்த உறுப்பினர்கள் கூண்டோடு சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல்! வாய்ப்பு வழங்காததால் எடுத்த முடிவு!

தி.மு.க மூத்த உறுப்பினர்கள் கூண்டோடு சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல்! வாய்ப்பு வழங்காததால் எடுத்த முடிவு!

DhivakarBy : Dhivakar

  |  4 Feb 2022 12:43 PM GMT

"எங்க குடும்பமே தி.மு.க குடும்பம் தான், நான் 25 வருடம் கட்சியில் இருக்கிறேன்" என்று கட்சியின் மீது விரக்தியில், சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்த பெண்மணியின் வார்த்தைகள் இவை.


"வாய்ப்பு, வளர்ச்சி, முக்கியத்துவம்" என்ற வார்த்தைகள் தி.மு.க 'விற்கு பிடிக்காத ஒன்று. கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்து உழைத்து தன் வாழ்க்கையை கடப்பவர்களுக்கு, தி.மு.க பெரும்பாலும் வாய்ப்பு வழங்காது என்ற ஒரு மிகப் பெரிய குற்றச்சாட்டு அக்கட்சியின் மீது இருந்து வருகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

ஒருவர் பண பலம் கொண்டிருந்தால் தி.மு.க'வின் பெரிய பொறுப்புக்கள் அவரை சென்றடையும், இதுவே அக்கட்சியின் எழுதப்படாத ஒரு விதியாகும். ஆனால் பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்தவர்களுக்கு சிறுசிறு ஊரக கட்சிப் பதவிகளை கொடுத்து அவர்களை வாயடைக்க வைத்து விடும் தி.மு.க.

தற்போது நடக்கவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், சிறுசிறு கட்சிப் பொறுப்பில் இருந்தவர்களை மக்கள் பிரதிநிதியாக மாற்ற திமுக தயங்கி வருவது, அக்கட்சியின் உறுப்பினர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.


அதற்குத் தக்க எடுத்துக்காட்டு நீலகிரி மாவட்டம் கூடலூரில் பல ஆண்டுகளாக தி.மு.க'வில் உறுப்பினராக இருந்தவர்களுக்கு, இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால், அவர்கள் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.


"எனது கணவர் ஒரு ஆட்டோ ஓட்டுனர், 35 வருடம் தி.மு.க கட்சியில் இருந்துள்ளார் அவர் இறந்துவிட்டார், நான் 25 வருடம் கட்சியில் பனி செய்துள்ளேன் எனக்கு வாய்ப்பளிக்கவில்லை, ஆனால் பொதுமக்களின் ஆதரவுடன் நான் சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளேன்" என்று வேதனையுடன் அப்பகுதி தி.மு.க மூத்த உறுப்பினர் ஜோதி கூறினார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News