மத்திய அரசு எச்சரித்தும் கோட்டை விட்ட தமிழக அரசின் சுகாதாரத்துறை !
By : Mohan Raj
மத்திய அரசு எச்சரித்தும் வெளிநாட்டு பயணிகளை கண்காணிப்பதில் கோட்டை விட்ட தமிழக அரசு.
வேலூர் மாவட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து வந்த நபர்களின் விவரங்களை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. அதில் கடந்த மாதம் 30-ந்தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து 71 பேர் வேலூருக்கு வந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனா அதிகமாக இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதற்கு காரணம் வெளிமாநிலத்தில் இருந்து சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தவர்களையும் வேலூர் மாவட்ட கணக்கில் சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் மொத்தம் 71 பேரில் 42 பேர் கண்டறியப்பட்டு டாக்டர்கள் கண்காணிப்பில் உள்ளனர். மீதமுள்ள 17 பேரை கண்டறிய வேலூர் மாநகர பகுதியில் உள்ள லாட்ஜ்களில் தங்கி உள்ளவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். வேலூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வருபவர்களில் ஒரு சிலர் போலி முகவரி கொடுத்து தங்கி சிகிச்சை பெற்று வருவதும் தற்பொழுது கண்டறியப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்கள் வீடுகளிலேயே 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்ற அறிவிப்பை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் வெளிமாநிலத்தவர்கள் ஆதார் அட்டை முகவரியை வைத்து பதிவு செய்ய வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் விடுபட்டவர்களை கண்டறியும் பணியும் தற்பொழுது முடுக்கிவிடப்பட்டுள்ளது.