Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க பேனரில் மோடியின் புகைப்படம்: மேலிடத்தில் வந்த போன் காலால் பரபரப்பு!

பெரம்பலூரில் தி.மு.க பிரமுகர் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் பேனர் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க பேனரில் மோடியின் புகைப்படம்: மேலிடத்தில் வந்த போன் காலால் பரபரப்பு!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  24 March 2023 1:00 AM GMT

பெரம்பலூரில் தற்பொழுது தி.மு.க பிரமுகர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் பேனர் போஸ்டர் தான் தற்பொழுது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பையும் மற்றும் பேச்சுப் பொருளாகவும் அதிகமாக பரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக தி.மு.க பிரமுகர் வைத்த டிஜிட்டல் பேனரில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் புகைப்படமும் மற்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை புகைப்படங்களும் அதில் இடம்பெற்று இருந்தனர். தி.மு.க கிளை செயலாளர் ஒருவர் தன்னுடைய போட்டோவுடன் மோடி அவர்களின் புகைப்படம், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை புகைப்படம் அதனுடைய இடது பக்கத்தில் தி.மு.க மு.க.ஸ்டாலின் புகைப்படம் போன்ற புகைப்படங்கள் இருந்த ஒரு பேனரில் இந்த ஒரு போஸ்டர் மிகவும் வைரலாகி வருகிறது.


குறிப்பாக பெரம்பலூர் மாவட்டம் காரை மலையப்பர் நகர் பகுதியில் சேர்ந்த தி.மு.க கிளை செயலாளர் இருப்பவர்தான் சிவகுமார் என்பவர். இவர் தற்பொழுது நரிக்குறவர் இன மக்களை பட்டியலின பட்டியில் சேர்த்த பிரதமர் மோடி மற்றும் தமிழகம் முதல்வர் மற்றும் மத்திய மாநில அமைச்சர்களுக்கு தன்னுடைய நன்றியை தெரிவிக்கும் விதமாக இந்த ஒரு பேனரை ஏற்பாடு செய்ததாக கூறப்பட்டு இருக்கிறது. இந்த பேனரில் பிரதமர் முதல் முதலமைச்சர் வரை பல்வேறு நபர்களின் புகைப்படங்கள் நிறைந்ததாகவும் இருந்தது.


பெரம்பலூர் தி.மு.க வட்டாரத்தில் இந்த ஒரு போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் போஸ்டர் வைக்கப்பட்ட சிறிது நேரத்தில் தி.மு.க மாவட்ட அலுவலகத்தில் இருந்து கிளை செயலாளர் சிவக்குமாரை கண்டித்ததாகவும், அதை அடுத்து அந்த பேனரை அவர் அகற்றியதாகவும் கூறப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News