போலீஸை பொதுமக்கள் முன்னிலையில் அடித்த தி.மு.க. அமைச்சர் பி.ஏ!
கடந்த 18ம் தேதி காலை சுமார் 10.30 மணியளவில் திருச்செந்தூர் மணி அய்யர் ஓட்டல் சந்திப்பில் போக்குவரத்துக்கு இடையூறாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் பி.ஏ. கிருபாகரன் பயன்படுத்தும் அரசு கார் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது அங்கு போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் தலைமை காவலர் முத்துகுமார் ஈடுபட்டிருந்தார்.
By : Thangavelu
கடந்த 18ம் தேதி காலை சுமார் 10.30 மணியளவில் திருச்செந்தூர் மணி அய்யர் ஓட்டல் சந்திப்பில் போக்குவரத்துக்கு இடையூறாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் பி.ஏ. கிருபாகரன் பயன்படுத்தும் அரசு கார் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது அங்கு போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் தலைமை காவலர் முத்துகுமார் ஈடுபட்டிருந்தார். ஒரு கட்டத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக பி.ஏ.வின் கார் இருந்துள்ளது. இதனால் டிரைவர் குமாரிடம் காரை ஓரமாக விடுங்கள் என்று போலீஸ் முத்துக்குமார் கூறியுள்ளார். ஆனால் டிரைவர் காரை எடுக்க முடியாது என்று ஆவேசமாக கூறியுள்ளார். இதன் பின்னர் அங்கு இருந்த ஆட்டோக்காரர் ஒருவர் சத்தம் போட்ட பின்னர் காரை தள்ளி நிறுத்தியுள்ளார் குமார்.
இது பற்றி ஓட்டலில் இருந்த அமைச்சர் பி.ஏ. கிருபாகரனுக்கு தகவல் தெரியவந்ததும் வெளியே வந்து போலீஸ்காரர் முத்துக்குமாரை மிகவும் கீழ்த்தரமான முறையில் திட்டியுள்ளார். இருவரும் பிடித்துக்கொள்ள போலீஸ்காரர் முத்துக்குமாரை கன்னத்தில் அடித்துள்ளார். இதில் காயமடைந்த முத்துக்குமார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். இதன் பின்னர் நடந்த சம்பவம் பற்றி கோவில் காவல் நிலையத்தில் முத்துக்குமார் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் பொதுமக்களுக்கு தெரியவர விவகாரம் எஸ்.பி. ஜெயக்குமார் வரைக்கும் சென்றுள்ளது. இதனை தொடர்ந்து எஸ்.பி. போலீசாரிடம் சமாதானம் பேசியுள்ளார்.
இது தொடர்பாக முத்துக்குமார் கூறும்போது, நான் மிகவும் பணிவுடன்தான் காரை எடுக்க சொன்னேன். ஆனால் டிரைவர் குமார் என்னை அவதூறான முறையில் பேசினார். அமைச்சர் பி.ஏ. பொதுமக்கள் முன்னிலையில் கன்னத்தில் அடித்து என்னை கேவலமான முறையில் பேசினார். இரவு சமயத்தில் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் என்னிடம் மன்னிப்பு கேட்டனர். நான் ஒரு சாதாரண போலீஸ் அனைத்து முருகக் கடவுள் சன்னதிலேயே நடந்துள்ளது. அனைத்தையும் இறைவன் பார்த்துக்கொள்வார் என்று கூறினார். ஆளும் கட்சியான திமுகவினர் அடாவடியில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாக உள்ளது. இதனால் சாதாரண பொதுமக்கள் கூட வெளியில் நடமாடுவதற்கு பயம் ஏற்பட்டுள்ளது. ரவுடிசம் மற்றும் கொலை, கொள்ளை சம்பவங்களிலும் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் திமுகவின் எம்.பி.களே ஈடுபடுவது வெட்ட வெளிச்சமாக தெரியவருகிறது.
Source, Image Courtesy: Dinamalar