மீண்டும் சர்ச்சையில் சிக்கிக் கொண்ட அமைச்சர் பொன்முடி.. நடந்தது என்ன?
ஆசிரியர்கள் மாணவர்களை படித்த காலம் போய், மாணவர்கள் ஆசிரியர்களை அடிக்கும் காலம் வந்து விட்டதாக சர்ச்சையாக பேசிய அமைச்சர்.
By : Bharathi Latha
மாணவர்களை ஆசிரியர்கள் பிரம்பால் அடித்த காலம் போய் ஆசிரியர்களை மாணவர்கள் பிரம்பால் அடிக்கும் காலம் வந்து விட்டது. எனவே ஆசிரியர்கள் அட்சஸ்ட் செய்து கொள்ளவும் என்று தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி பேசி இருக்கிறார். இது தொடர்பாக பேராசிரியர்கள் மத்தியில் அமைச்சருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அமைச்சர் பொன்முடி அவர்கள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார் இது முதல்முறை அல்ல.
உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கல்லுாரி பேராசிரியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய வீடியோ ஒன்றுதான் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக தமிழக பேராசிரியர்கள் மத்தியில் இவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பு இருக்கிறது. மாணவர்களை ஆசிரியர்கள் பிரம்பெடுத்து அடித்த காலம் மாறி, மாணவர்கள் பிரம்பெடுத்து ஆசிரியர்களை அடிக்க வரும் காலமாகி விட்டது. இது எல்லாமே கால மாற்றம் தான், இதை அட்ஜஸ்ட் செய்து கொண்டு கல்வி கற்பிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.
இதுகுறித்து. தமிழக ஆசிரியர் பாதுகாப்பு மற்றும் முன்னேற்ற சங்க தலைவர், செயலர், பொருளாளர் ஆகியோர் கூட்டாக அறிக்கையில்கூறும் பொழுது, "ஒரு உயர் கல்வித் துறை அமைச்சராக இருப்பவரை இப்படி பொறுப்பற்ற முறையில் பேசுவது ஆசிரியர்களை வேதனை அடையச் செய்து இருப்பதாக" குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: Dinamalar