Kathir News
Begin typing your search above and press return to search.

அண்ணாமலை சொந்த ஊரை தாண்ட முடியாது - தி.மு.க அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எச்சரிக்கை!

அண்ணாமலை சொந்த ஊரை தாண்ட முடியாது - தி.மு.க அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எச்சரிக்கை!
X

ThangaveluBy : Thangavelu

  |  23 May 2022 12:33 PM IST

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சொந்த ஊரை தாண்ட முடியாது என்று தி.மு.க. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் கடைவீதியில் தி.மு.க. அரசு ஒரு ஆண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து அக்கட்சி சார்பில் நேற்று (மே22) பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது: தமிழ்நாட்டில் பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய அனுமதி அளித்துள்ளோம் என்றார். வருகின்ற 4 ஆண்டுகளும் மக்களுக்கு பயன்பெறுகின்ற வகையில் தமிழக அரசின் திட்டங்கள் தொடரும் எனறார்.

மேலும், 72 மணி நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என்றால் கோட்டையை முற்றுகையிடுவோம் என பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பேச்சு குறித்தும் விமர்சனம் செய்தார். அதாவது தி.மு.க. ஆட்சி. சொன்னதை செய்து காட்டியவர் முதலமைச்சர் ஸ்டாலின். உங்களின் மிரட்டலுக்கு தி.மு.க. பயபடாது. அதே நேரத்தில் சொந்த ஊரான கரூர் மாவட்டத்தையே தாண்ட முடியாது என்றார். இவரது பேச்சு தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: News 7 Tamil

Image Courtesy: News 18 Tamilnadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News