Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரு ஓவர்தான் முடிந்துள்ளது மீதி 19 ஓவர் இருக்கு, எல்லாத்தையும் நிறைவேத்திடுவோம்! - செந்தில் பாலாஜியின் அலப்பறை!

திமுக ஆட்சியில் 4 மாத சாதனை என்பது 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு ஓவர் மட்டுமே முடிந்துள்ளது. அதிலேயே பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரு ஓவர்தான் முடிந்துள்ளது மீதி 19 ஓவர் இருக்கு, எல்லாத்தையும் நிறைவேத்திடுவோம்! - செந்தில் பாலாஜியின் அலப்பறை!

ThangaveluBy : Thangavelu

  |  30 Sep 2021 3:44 AM GMT

"திமுக ஆட்சியில் 4 மாத சாதனை என்பது 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு ஓவர் மட்டுமே முடிந்துள்ளது. அதிலேயே பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்" என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் ஊராட்சி குழு 8வது வார்டு பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் கண்ணையன் போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். அதற்கு முன்னர் திமுக தேர்தல் அலுவலகத்தை திறந்தபோது யாரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், மாஸ்க் அணியாமலும் இருந்தனர். அமைச்சர் கூட மாஸ்க் அணியாதது சர்ச்சயை ஏற்படுத்தியது.

இதனிடையே பிரச்சாரத்தில் பேசிய செந்தில் பாலாஜி, தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை 4 மாதத்தில் செயல்படுத்தியுள்ளோம். அதிலும் திமுக ஆட்சியின் நான்கு மாத சாதனை என்பது 20 ஓவர் கிரிக்கெட் போல. ஆனால் ஒரு ஓவர் மட்டுமே முடிவடைந்துள்ளது. இன்னும் 19 ஓவர் மீதி இருக்கும் நிலையில், அதில் நிறைவேற்றுவோம் என பேசினார். இவரது பேச்சை பொதுமக்கள் கேட்டு சிரித்ததுதான் மிச்சம்.

Source, Image Courtesy: Vikatan


Next Story
கதிர் தொகுப்பு
Trending News