உதயநிதி படத்தின் முழு காட்சியையும் முன்பதிவு செய்து தலையாய கடமையாய் இலவசமாக டிக்கெட் விநியோகம் செய்யும் தி.மு.க எம்.எல்.ஏ
நெஞ்சுக்கு நீதி படத்தின் மொத்த டிக்கெட்டை முன்பதிவு செய்து அனைவருக்கும் இலவசமாக வழங்குவதாக மானாமதுரை தி.மு.க எம்.எல்.ஏ தமிழரசி ரவிக்குமார் பெயர் பதித்த போஸ்டர் இணையங்களில் வைரலாகி வருகிறது.

By : Mohan Raj
நெஞ்சுக்கு நீதி படத்தின் மொத்த டிக்கெட்டை முன்பதிவு செய்து அனைவருக்கும் இலவசமாக வழங்குவதாக மானாமதுரை தி.மு.க எம்.எல்.ஏ தமிழரசி ரவிக்குமார் பெயர் பதித்த போஸ்டர் இணையங்களில் வைரலாகி வருகிறது.
இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க எம்.எல்.ஏ'வும், முதல்வரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் 'நெஞ்சுக்கு நீதி' படம் வெளியானது. காலையிலிருந்தே கழக உடன்பிறப்புகள் 'நெஞ்சுக்கு நீதி' படம் வெளியாவதை முன்னிட்டு அவர் அவர்களுக்கு தகுந்த மாதிரி ஏதாவது நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வித்தியாசமாக யோசித்து தி.மு.க எம்.எல்.ஏ ஒரு புது முயற்சியை செய்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமைந்துள்ள பிரியா திரை அரங்கில் இன்று 'நெஞ்சுக்கு நீதி' படம் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தி.மு.க'வைச் சேர்ந்த தற்போதைய மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசி ரவிக்குமார் இன்று மாலை 6:30 காட்சிக்கான அனைத்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளார். இந்த டிக்கெட்டுகள் அனைத்தையும் இளைஞர்களுக்கும், கட்சி பிரதிநிதிகளுக்கும் இலவசமாக வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டிக்கெட் தேவைப்படுவோர் இந்த தொலைபேசி அழைக்கவும் என்று போஸ்டர்கள் தயார் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர், இது இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.
மக்களுக்கான பணிகள் நிறைய இருக்க உதயநிதி நடித்த படத்தை பிரமோட் செய்ய வேண்டும் என்ற தி.மு.க'வின் எம்.எல்.ஏ'வின் கடமை உணர்ச்சியை குறித்து சமூக வலைதளங்களில் பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
