ஆண்டிமுத்து ராசா இந்துக்கள் மீதான இழிவான பேச்சு - தமிழகம் முழுவதும் கிளம்பும் எதிர்ப்புகள்
தி.மு.க எம்.பி ஆ. ராசா இந்து மதத்தை பற்றி இழிவாக பேசியதற்கு எதிராக தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் புகார்.
By : Bharathi Latha
தி.மு.க எம்.பி ஆன ஆ. ராசாவின் சமீபத்திய மேடை துறையில் இந்து மதத்தை பற்றி அவர் பேசிய பேச்சுக்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆ.ராசாவை கைது செய்ய கோரி காவல்நிலையித்தில் பா.ஜ.க மற்றும் இந்து முன்னனி அமைப்பினர் புகார் மனு கொடுத்து வருகின்றர். அ.தி.மு.கவினரோ ஆ.ராசாவின் உருவப்படத்தை எரித்து தங்களை எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் தர்மபுரியில் வட தமிழக விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் பயிற்சி நடைபெற்றது.
தொடர்ந்து பல்வேறு இடங்களில் பல கட்சியினரும் இவருக்கு எதிராக புகார் பண்ணி கொடுத்து வருகின்றார்கள். அந்த வகையில் தற்போது தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் மருது ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் அழகர் கோவில் சாலையில் உள்ள போலீஸ்கர் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார்கள். அங்கு கமிஷனரை சந்தித்து மனு ஒன்றை கொடுத்துள்ளார்கள்.
அது சென்னையில் நடந்த விழாவில் தி.மு.க துணை பொதுச்செயலாளரும், எம்.பியும் ஆன ராஜா இந்து மதத்தை பற்றி இழிவாக பேசியதாக வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இதனால் மத ரீதியாக வன்முறையை தூண்ட முயற்சி செய்வதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு மீது உடனடி விசாரிக்க செய்ய வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் கமிஷனரிடம் கூறினார்கள்.
Input & Image courtesy: Asianet News