இந்து மதம் குறித்த தி.மு.க எம்.பியின் சர்ச்சை பேச்சு: அண்ணாமலை கண்டனம்!
இந்து மதம் குறித்த தி.மு.க எம்.பி கட்சியான பேச்சுக்கு அண்ணாமலை அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
By : Bharathi Latha
தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினரான ஆ.ராசா அன்மையில் இந்து மதம் குறித்து சர்ச்சையான செய்திகளை பதிவிட்டு உள்ளார் மேலும் இவர் பேசிய அந்த வீடியோ நேற்று காலை முதல் மிகவும் வாயிலாகி வருகிறது. மேலும் இவருடைய இந்து பேச்சு பொறுத்து பல்வேறு தலைவர்களும் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள் அந்த வகையில் மாநில பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்களும் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் நாமக்கல்லில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஒன்றில் இந்து மதம் குறித்து அவர் பேசுகையில், "நீ கிறிஸ்தவனாக இல்லை எனில், நீ இஸ்லாமியனாக இல்லையெனில், நீ பாரசீகனாக இல்லையெனில், நீ கட்டாயம் இந்துவாக தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற கூறுகிறது" என்று அவர் கூறுகிறார். இதை சொல்லி பிறகு மேலும் பல கருத்துக்களை பற்றியும் கூறியிருக்கிறார். இவருடைய இந்த இந்து மதம் குறித்த கருத்துக்கள் பல்வேறு தலைவர்கள் இடையே பெரும் கண்டனத்தை எழுப்பியுள்ளது.
இது பற்றி மாநில பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சிக்கையில், ட்விட்டரில் ராசா பேசிய வீடியோ பதிவிட்டு "மற்றவர்களை திருப்தி படுத்துவதில் நோக்கமாகக் கொண்ட தி.மு.க எம்.பி மீண்டும் ஒரு சமூகத்தின் மீது வெறுப்புணர்வை வீசி இருக்கிறார். தமிழ்நாடு தனக்கு தான் சொந்தம் என்று நடக்கும் இந்த அரசியல் தலைவர்களின் மனநிலை மாறாதது மிகவும் துரதிஷ்டமானது என்று தி..மு.கவையும், தி.மு.க தலைவர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Input & Image courtesy:news