கோயில் இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுவதை தடுத்த தி.மு.க. எம்.பி.!
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயிலில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு திமுக எம்.பி. ராமலிங்கம் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By : Thangavelu
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயிலில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு திமுக எம்.பி. ராமலிங்கம் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் மன்மதீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலுக்கு பின்புறத்தில் சுமார் 3 கோடி மதிப்பிலான இடம் உள்ளது. அந்த இடம் சம்பந்தம் என்பவரின் பெயரில் இருக்கிறது. இதனிடையே கடந்த 10 ஆண்டுக்கு முன்பு சம்பந்தத்திடம் இருந்து தியாகராஜன் என்பவர் வாங்கியுள்ளார். ஆனால் அதன் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. மேலும் அந்த இடத்திற்கு வாடகை பணம் ரூ.14 லட்சம் செலுத்தாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், அறநிலையத்துறை இணை ஆணையருக்கு நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது கோயில் நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாகவும் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரி முத்துராமன் மற்றும் தாசில்தார் விஜயராகவன் உள்ளிட்டோர் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றி வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த மயிலாடுதுறை திமுக எம்.பி. ராமலிங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அங்கு இருந்து அதிகாரிகளிடம் வாக்கு வாதம் செய்துள்ளார். கோயில் இடத்தை ஏன் அகற்றுகின்றனர் என்று சண்டையும் பிடித்துள்ளார். ஆனால் இதனை காதில் வாங்காத அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்தை அகற்றிவிட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source: Dinamalar
Image Courtesy: Dinakaran