தொழிலாளி கொலை! பிரேத பரிசோதனை அறிக்கைக்கு முன்பே கடலூர் தி.மு.க. எம்.பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு?
கடலூர் திமுக எம்.பி. பி.ஆர்.வி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் வேலை பார்த்து வந்த தொழிலாளி கோவிந்தராஜ் உயிரிழந்த விவகாரத்தில் பல்வேறு திருப்பங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளது. கோவிந்தராஜின் உடல் கடந்த செப்டம்பர் 23ம் தேதி பிற்பகல் விழுப்புரம் மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.
By : Thangavelu
கடலூர் திமுக எம்.பி. பி.ஆர்.வி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் வேலை பார்த்து வந்த தொழிலாளி கோவிந்தராஜ் உயிரிழந்த விவகாரத்தில் பல்வேறு திருப்பங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளது. கோவிந்தராஜின் உடல் கடந்த செப்டம்பர் 23ம் தேதி பிற்பகல் விழுப்புரம் மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.
இதில் கோவிந்தராஜின் மீது கொடுரமான முறையில் தாக்கப்பட்டு இறந்தது தெரியவந்துள்ளது. அதாவது தலையின் பின்புறத்தில் ஸ்கல் உடைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை கொலை வழக்காக மாற்றுவதற்கு போலீசார் திட்டமிட்டுள்ளது தெரியவருகிறது. கோவிந்தராஜ் மரணத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கொடுத்த அழுத்தமே காரணம் என கூறப்படுகிறது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுக்கா பணிக்கன் குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ளது திமுக எம்.பி. டி.ஆர்.வி. ரமேஷ் குடும்பத்திற்கு சொந்தமான முந்திரி ஆலை. இந்த ஆலையில் மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் முந்திரியை ஹீட் செய்து உடைத்து பதப்படுத்தும் வேலையை செய்து வந்தார்.
முந்திரி ஆலைக்கு உரிமையாளர் எம்.பி. ரமேஷ் அடிக்கடி வருவார் என்று சொல்லப்படுகிறது. இதன் தொழில் குறித்தும் அடிக்கடி விவாதித்துள்ளார். ரமேஷுக்கு என்று தனியாக அறை உள்ளது. கடந்த செப்டம்பர் 19ம் தேதி மாலையில் முந்திரி ஆலைக்கு சென்ற ரமேஷ் தனது அறையில் மது அருந்தியுள்ளார். இவருக்கு தொழிலாளி கோவிந்தராஜ் பற்றிய சில தகவல்களை தனது நிர்வாகிகள் மூலமாக கேள்விப்பட்டுள்ளார் ரமேஷ்.
முந்திரியை ஆலையில் இருந்து கொஞ்சம் முந்திரியை எடுத்து சென்று வெளியில் விற்பனை செய்துள்ளார் என்று கோவிந்தராஜ் மீது ரமேஷுக்கு சென்ற புகார் ஆகும். அன்றைய நாள் மது அருந்திக் கொண்டிருந்தபோது, கோவிந்தராஜை வரவழைத்து ரமேஷ் எம்.பி. மற்றும் அவரது ஆட்கள் சேர்ந்து கடுமையாக அடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் கோவிந்தராஜிக்கு ரத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் அவரது மேனேஜர் மற்றும் சில ஆட்கள் சேர்ந்து நள்ளிரவு காடம்புலியூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது கோவிந்தராஜ் மீது திருட்டு புகார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கச் சொல்லியுள்ளனர் எம்.பி.யின் ஆட்கள். ஆனால் போலீசார் பயந்து அவரை சிறையில் அடைக்க மறுத்தது மட்டுமின்றி மருத்துவமனையில் அனுமதியுங்கள் எனக் கூறியுள்ளனர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் பின்னர் அடுத்த நாள் காலை 20ம் தேதி கோவிந்தராஜ் மகன் காடம்புலியூர் காவல் நிலையத்துக் சென்று எம்.பி உட்பட ஐந்து பேர் பெயரை சொல்லி அவர்கள் எனது தந்தையை கொன்று விட்டதாக புகார் கொடுத்துள்ளார். புகாரால் காவல் நிலையத்தில் உள்ள போலீசார் அனைவரும் அதிர்ந்துள்ளனர்.
இதன் பின்னர் கடலூர் மாவட்ட பாமக நிர்வாகிகள் டாக்டர் ராமதாசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனால் அவர் தொடர்ந்து எம்.பி. பற்றியும் முந்திரி ஆலையில் நடந்த சம்பவங்கள் பற்றியும் ட்விட்டர் மூலம் அவ்வப்போது கருத்துக்களை வெளியிட்டார். இதனால் அரசியல் ரீதியாக கோவிந்தராஜின் மரணம் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும், எம்.பி.யை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும் என்று பாமக மற்றும் ஊர் மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் போலீசாருக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்தது.
பாமக சார்பில் வக்கீல் பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கை தாக்கல் செய்தார். உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் உத்தரவின் பேரில் கோவிந்தராஜ் பிரேதத்தை ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் 23 ஆம் தேதி, விழுப்புரம் முண்டியாம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்தனர்.
ஒரு கட்டமாக கோவிந்தராஜின் உடலை ஊர் மக்களிடம் பேசி ஒப்படைத்தனர். இதன் பின்னர் மருத்துவமனை வட்டாரங்களில் விசாரித்தபோது, கோவிந்தராஜின் தலையின் பின் பகுதியில் அடிபட்டு ஸ்கல் ஓப்பனாகியுள்ளது. இடது கண் பகுதியிலும் அடிபட்டுள்ளது. காது பக்கத்தில் எலும்பு உடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. உயிரிழந்ததற்கு தலையின் பின்புறத்தில் ஸ்கல் ஓப்பனாகியுள்ளதுதான் என்று மருத்துவ வட்டாரங்கள் தகவல் கூறியுள்ளனர்.
இந்நிலையில், எம்.பி. ரமேஷ் குறித்து கடலூர் மாவட்ட போலீசார் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். கொலை புகாரில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாக அன்பகம் கலை திமுக எம்.பி. ரமேஷிடம் சில தகவல்களை கூறியுள்ளார்.
ஏன் இப்படி செய்தீங்க? திருடியிருந்தா காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டியதுதானே. இப்போ என்னாச்சு பார்த்தீங்களா? முதலமைச்சர் வரைக்கும் உங்க ரிப்போர்ட் போயுள்ளது. உங்க மேல முதலமைச்சர் ரொம்ப கோவமாக உள்ளார். எனவே எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். இதனை கேள்விப்பட்ட ரமேஷ் மிகவும் அதிர்ச்சியடைந்தாக திமுக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மேலும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் அழுத்தங்களும் இந்த கொலை வழக்கு பதிவு செய்ய காரணம் என பாமக நிர்வாகிகளும் தகவலை பரிமாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Minnambalam