தி.மு.க. எம்.பி. ராசா மனைவி உயிரிழப்பு: தமிழக பா.ஜ.க. தலைவர் இரங்கல்.!
நீலகிரி திமுக எம்.பி. ராசாவின் மனைவி பரமேஸ்வரி புற்றுநோய் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
By : Thangavelu
நீலகிரி திமுக எம்.பி. ராசாவின் மனைவி பரமேஸ்வரி புற்றுநோய் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சியை சார்ந்தவர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மக்களவை உறுப்பினரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளருமான திரு.ஆ.ராசா அவர்களின் துணைவியார் திருமதி பரமேஸ்வரி உடல்நலக் குறைவால் மறைந்த செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது.
அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய எனது சார்பிலும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும் இறைவனைப் பிராத்திக்கிறேன். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.