முறைகேடான வெற்றியை தொடர்ந்து அன்புமணி ராமதாஸ், சீமானை வம்பிழுக்கும் தி.மு.க. எம்.பி. செந்தில்குமார்!
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
By : Thangavelu
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் அனைத்து மாவட்டங்களிலும் முறைகேடாகவும், பணம் கொடுத்தும் வெற்றி பெற்றதாக பாமக மற்றும் அதிமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், உள்ளாட்சியில் வெற்றி பெற்றதால் வேண்டும் என்றே பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை வம்பிழுக்கும் தருமபுரி திமுக எம்.பி.யின் முகநூல் பதிவு அமைந்துள்ளது.
இது பற்றி அவர் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: பாஜகவுக்கு ஆவது அந்த ஒத்த ஓட்டு கிடைத்திருக்கும் நிலையில், அதுகூட நமக்கு கிடைக்கவில்லை என்று ஆதங்கபடும் நாம் தமிழர் கட்சி தோழர்களே, கவலை வேண்டாம், சமூக வலைதள வாக்குகளையும், யூடியூயையும் இன்னும் என்னவில்லை என்ற நம்பிக்கை செய்தி கிடைத்துள்ளது. பொறுமை காப்போம் என்று சீமானை குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த பதிவில், 10.5 சதவீத இடஒதுக்கீடு சட்டம் இயற்றியது, இடஒதுக்கீடு போராட்டத்தில் சுட்டு கொல்லபட்ட 21 பேர் நினைவக மணிமண்டபம் மூலம் 7 மாவட்டங்களில் பெரும் அளவில் வன்னிய சமூகதாய வாக்குகள் திமுகவிற்கு கிடைத்துள்ள நிலையில் வரும் காலங்களில் நம்ம சின்ன ஐயா யாருடன் கூட்டணி பேசுவது எப்படி பேரம் பேசுவது என அன்புமணி ராமதாஸை நேரடியாக வம்பிழுத்துள்ளார்.
அடுத்த பதிவில் உள்ளாட்சியில் திமுக வெற்றி பெற்ற நற்செய்தியை விட ஒரு கட்சி தன் செல்வாக்கை 7 வடமாவட்டங்களில் நிரூபிக்க போட்டி போட்டு வெற்றியை இழந்து நிற்கும் நிலையில் திமுக மட்டும்தான் அனைத்து சமுதாயத்திற்கும் ஆன கட்சி என நிரூபனமாகியுள்ளது. என்று ராமதாஸையும் வம்பிழுத்துள்ளார். இவரது பதிவுக்கு பாமக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் கடுமையான கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
Source: Dmk Mp Senthil Kumar
Image Courtesy:One India Tamil