தி.மு.க. எப்போதும் எதிர்க்கட்சிதான்.. ஜி.கே.வாசன் பேட்டி.!
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யுவராஜாவுக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

இதற்கு முன்னதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், தமிழக அரசு கொடுத்த திட்டங்களும், சலுகைகளும் மக்களிடம் சென்றடைந்துள்ளது. இதன் காரணமாக மக்களுக்கு தமிழக அரசின் மீது நம்பிக்கை உள்ளது.
இந்த நம்பிக்கையால் அதிமுக கூட்டணியின் வெற்றி பிரகாசமாக உள்ளது. ஏப்ரல் மாதம் 1-ம் தேதி மீண்டும் ஈரோட்டுக்கு வருகிறேன். மேற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கத்திற்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன்.
மேலும், தமிழகத்தில் தேர்தலுக்கு பின்னர் முதல் அணியாக வெற்றி அணியாக அதிமுக நீடிக்கும். 2-வது அணியாக எதிர்கட்சியாக தான் திமுக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.